பாகிஸ்தானில் கொரோனோ வைரஸ்;பீதியை கிளப்பாமல் தேவைப்பட்டால் முழுஅடைப்பு நடத்தப்படும்- இம்ரான்கான்

பாகிஸ்தானில் கொரோனா வைரஸுக்கு 500 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், “மக்களுக்கு முழு பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது, ஊரடங்கு-கடை அடைப்பு தேவை இல்லை, அது மக்களை பரபரப்புக்குள்ளாக்கும்”என்று இம்ரான்கான் தெரிவித்து உள்ளார்

.

பாகிஸ்தானில் கொரொனோ காய்ச்சலுக்கு இதுவரை 501 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3 பேர் வரை பலியாகியுள்ளனர். சிந்து மாகாணத்தில் கொரோனோ காய்ச்சலுக்கு மட்டும் 252 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துமாறு மருத்துவ நிபுணர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தானில் முழு அடைப்பை தேவை ஏற்பட்டால் அமல்படுத்த படும் என்று பாகிஸ்தான்  பிரதமர் இம்ரான்கான் தெரிவித்து இருக்கிறார்

இதுகுறித்து இம்ரான் கான் கூறும்போது, “முழு அடைப்பு என்பது ஊரடங்கு உத்தரவைப் போன்றது. அது தேவையில்லாத பதற்றத்தை அளிக்கும். அதை நாங்கள் அளிக்க விரும்பவில்லை. இதனால் எல்லை மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிற்கு கொரொனோ வைரஸ் பரவ சாத்தியம் இல்லை என சொல்லப்பட்ட நிலையில், பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளித்திருப்பதாக தகவல் வருகிறது

தற்போதைய தகவலின்படி உலகம் முழுவதும் 2,76,474 பேர் கொரொனோ காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,586 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவை அச்சுறுத்தி வரும் கொரொனோ காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கொரொனோ  காய்ச்சல் பரவியுள்ளது.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top