மீனவர்களை ஒடுக்கும் தமிழக அரசின் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம்

13 கடலோர மாவட்டங்களில் தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.இச்சட்டத்தின் சில வரையறைகளுக்கு  சில எதிராக மீனவர்கள் போராடிவருகின்றனர்

தமிழகத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 13 கடலோர மாவட்டங்களில் தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

தடை செய்த வலைகளைப் பயன்படுத்துவது, கடற்கரையிலிருந்து 3 கடல் மைலுக்குள் (நாட்டிக்கல்) விசைப்படகுகள் மீன்பிடிப்பது போன்ற தவறுகள் செய்தால் மீன்வளத்துறையினர் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுப்பர்.

தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் அமல்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவதால் மீனவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்

தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின்படி, காலை 5 மணிக்கு கடலுக்கு சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு கரை திரும்புகிறார்கள். இவ்வாறு சென்று வரும்போது குறைவாக மீன்கள் கிடைப்பதால் பெரும் ந‌‌ஷ்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

எனவே விசைப்படகு மீனவர்களுக்கு 48 மணி நேரம் தங்கி கடல் தொழில் செய்ய அனுமதி வழங்க வேண்டும். அல்லது ஜூன் 15-ந்தேதி முதல் நவம்பர் மாத கடைசி வரை வழக்கம்போல் கடலுக்கு சென்று இரவு 12 மணி வரை மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும். டிசம்பர் முதல் ஏப்ரல் 15-ந்தேதி வரை ஒருநாள் விட்டு ஒருநாள், ஒருபகல், ஒரு இரவு மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ,தமிழக அரசு மீனவர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் மாறாக மீனவர்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்க புதிதாக மீன்வளத்துறையில் கடல் மீன்பிடிச் சட்ட அமலாக்கப்பிரிவை -மெரைன் என்போர்ஸ்மென்ட் விங் [கடந்தாண்டு டிசம்பரில் முதல்வர் தொடங்கி வைத்தார்.] உருவாக்கப்பட்டிருக்கிறது.  அதன்படி ஒரு காவல் கண்காணிப்பாளர், ஒரு துணைக்கண்காணிப்பாளர், 10 ஆய்வாளர்கள், 8 சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள் உள்ளிட்ட 112 பேர் நியமிக்க ஆணையிடப்பட்டு இருக்கிறது

இப்பிரிவினர் மீன்வளத்துறை ஆணையர், இயக்குநர் தலை மையிலும், மாவட்டங்களில் மீன்வளத்துறை உதவி இயக்குநர் கட்டுப்பாட்டில் இயங்கவும் உத்தர விடப்பட்டுள்ளது.

அதன்படி 13 மாவட்டங்களில் 19 உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டில் இயங்கும் இப்பிரிவுக்கு 19 புதிய ஜீப்புகள் தற்போது வழங்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு ரோந்துப் படகுகளும் விரைவில் வழங்கப்பட உள்ளன.

முதற்கட்டமாக துணைக் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், 3 ஆய்வாளர்கள், 2 சார்பு ஆய் வாளர்கள், 11 காவலர்கள் என 17 பேர் இம்மாதத்தில் பொறுப்பேற்றனர். எஞ்சிய 95 பேர் விரைவில் பொறுப்பேற்க உள்ளனர்.

ராமநாதபுரம் தெற்கு, வடக்கு, ராமேசுவரம், மண்டபம் ஆகிய 4 மீன்வளத்துறை உதவி இயக்குநர் பிரிவுக்கு 4 ஜீப்புகள் வழங்கப் பட்டுள்ளன. மேலும் ரூ.10 லட்சம் மதிப்பில் ரோந்துப் படகுகளும் விரைவில் வழங்கப்பட உள்ளன.

இனி விதியை மீறும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீன்பாடு இல்லாமல் ,கடலுக்கும் செல்லாமல் இரண்டு வாரங்களாக போராடும் மீனவர்கள் மீது எந்த அக்கறையும் இன்றி இது போன்று மீனவர்களுக்கு எதிரான சட்டங்களை கொண்டுவருவது நல்லதல்ல, இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழக அரசு சட்டத்தை இறுக்குவது மீனவர்களுக்கு எதிரான செயல் என்று தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கூறுகிறார்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top