ஈரானிய எழுத்தாளர் ,பொருளாதார நிபுணர், தோழர் ஃபரிபோர்ஸ் ரைஸ்டானா கொரோனா தாக்கி இறந்தார்!

தோழர் ஃபரிபோர்ஸ் ரைஸ்டானா [Comrade Fariborz Raisdana ]நேற்று தெஹ்ரானில் [COVID19] கொரோன வைரஸ் தாக்கியதன்  காரணமாக இறந்தார். அவர் ஒரு மார்க்சிஸ்ட், பொருளாதார நிபுணர், வளர்ச்சி மற்றும் சார்பு குறித்து ஃபார்சி மொழியில்  பல புத்தகங்களை எழுதியுள்ளார் . சிக்கனக் கொள்கைகளை வெளிப்படையாக விமர்சித்ததற்காக அவர் 2012 ல் சிறைக்குச் சென்றார். அவர் ஈரானிய எழுத்தாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருந்தார்.

தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் ஃபரிபோர்ஸ் ரைஸ்டானா பேராசிரியராக பணியாற்றி வந்தார். ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதி நெஜாட்டின் பொருளாதார கொள்கையை வெளிப்படையாக விமர்ச்சனம் செய்தவர். ஒரு தொலைக்காட்சி பேட்டியில் இரான் மக்களின் அன்றாட தேவையான அடிப்படை பொருட்கள் மற்றும் எரிசக்தி விநியோகங்களுக்கான அரசு மானியங்களை நீக்கியதை விமர்ச்சனம் செய்ததை காரணம் காட்டி இவரை ஆளும் அரசு  தெஹ்ரானின் மோசமான ‘எவின்’ சிறையில் அடைத்தது. ஒரு வருடம் சிறைவாசம் அனுபவித்த பின்னர், ஏப்ரல் 2013 இல் விடுவிக்கப்பட்டார்

தடுப்புக்காவலில் இருந்தபோது, ஈரானிய அரசியல் கைதிகளுக்கு சிறையில் சிகிச்சையளிப்பது தொடர்பான குளறுபடிகளையும்,மனிதாபிமானமற்ற செயல்களையும் மக்களுக்கு புரியும்படி வெட்டவெளிச்சம் ஆக்கினார் மற்றும் உத்தரவாதங்களின் உண்மை மற்றும் செல்லுபடியாகும் தன்மை குறித்து அவர் ஒரு வெளிப்படையான சவாலை வெளியிட்டார்.

“ஈரானிய சிறைகளுக்குள் இருக்கும் உண்மைகளை நீங்கள் வேண்டுமென்றே மறைத்து விட்டீர்கள். இங்கே, அரசியல் கைதிகளின் உரிமைகள் கடுமையாக மீறப்படுகின்றன.”என்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிக்கையில்  கடுமையாக பதிலுரைத்தார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top