கொரோனா வைரஸ்; சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தை ஓத்திவைக்க இஸ்லாமிய தலைவர்கள் கோரிக்கை

சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தை ஒத்திவைக்க பல இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்து உள்ளனர்.

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் கடந்த மாதம் 14-ந் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று அவர்களின் போராட்டம் 30 -வது நாளை எட்டி உள்ளது

நேற்றைய போராட்டத்தின் போது முஸ்லிம் பெண்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு புறாக்கள் மூலம் தூதுவிட்டு நூதன போராட்டத்தை கையாண்டனர். 

போராட்டம் 30 -வது நாளை எட்டி உள்ள நிலையில் கொரோனா வைரஸ் பரவி வருவதை தொடர்ந்து  போராட்டத்தை ஒத்திவைக்க பல இஸ்லாமிய அமைப்புகளின்  தலைவர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்து உள்ளனர்.

அது போல் தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் நடத்தி வரும் போராட்டங்களும் ஒத்திவைக்க கோரிக்கை விடுக்கபட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக சி.ஏ.ஏ.க்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை ஒத்திவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் சென்னையில் கூட்டாகப் பேட்டி அளித்தனர்.

 இஸ்லாமிய  அமைப்புகள் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தலைவர் காஜாமொய்தீன் பாகவி கோரிக்கை விடுத்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top