இந்திய பங்கு சந்தைகளின் வர்த்தகம் 45 நிமிடங்கள் நிறுத்தம்.! வரலாறு காணாத வீழ்ச்சி!!

அதலபாதாளத்தில் இந்திய பொருளாதாரம்.வரலாற்றில் இல்லாத  அளவு பங்குச்சந்தளில் கடும் சரிவு.இந்திய பங்கு சந்தைகளில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியால் வர்த்தகம் 45 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.

வரலாற்றில் இல்லாத  அளவு பங்குச்சந்தளில் கடும் சரிவு ஏற்பட்டு உள்ளது.  முதலீட்டாளர்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 3090 புள்ளிகள் சரிந்து 29,687 புள்ளிகளில் வர்த்தகம் உள்ளது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 966 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது 8,624 புள்ளிகளில் வர்த்தகம் உள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் ரூ.74.43 ஆக வீழ்ச்சி அடைந்து உள்ளது.

இந்திய பங்கு சந்தைகளில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியால் வர்த்தகம் 45 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.12 ஆண்டுகளுக்குப் பிறகு 45 நிமிடங்கள் வர்த்தகம் நிறுத்தப்பட்டு உள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது

இந்திய பொருளாதரத்தை பற்றிய கவலை ஆளும் பாஜக அரசுக்கு இருப்பதாக தெரியவில்லை.பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கு மதச்சண்டையை ஏற்படுத்தவும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்று மக்களை திசை திருப்பவும் மட்டுமே வேலையாக இருக்கிறது.டெல்லி வன்முறையை கொரோன பிரச்சனையால் திசை திருப்பி,வன்முறைக்கு காரணமான பாஜக காரர்களை கைது செய்ய கோர்ட் உத்தரவிட்டும் இன்னும் கைது செய்யாமல் பிரச்சனையை இழுத்தடிப்பதே வேலையாக வைத்திருக்கிறார்கள்.

அதலபாதாளத்தில் இந்திய பொருளாதாரம். சென்றுகொண்டு இருப்பதை பற்றியோ, வரலாற்றில் இல்லாத  அளவு பங்குச்சந்தை களில் கடும் சரிவு ஏற்பட்டதை பார்த்து, கவலை படாமலும் தங்களது மத அரசியலை பார்த்துக்கொண்டிருக்கிது ஆளும் பாஜக அரசு!   


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top