மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் விளம்பர பலகை வைக்க தடை – ஐகோர்ட்டு அதிரடி

மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் விளம்பர பலகை வைக்க தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் விளம்பர பலகை வைக்க தடை விதித்தும்,புதிய விதிகளை தமிழக அரசு உருவாக்கவும் சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது

மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் மட்டுமே விளம்பர பலகைகள் வைக்கும் வகையில் தமிழ்நாடு மாநகராட்சிகள் சட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி கடந்த 01.02.2019 முதல் இந்த சட்டம் அமலுக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதை எதிர்த்து சென்னை ஹோர்டிங்ஸ் சங்கம் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள், சங்கங்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டது.

இந்த வழக்குகளை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் விசாரித்தனர். இதைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘தனியாருக்கு சொந்தமான இடங்களில் விளம்பர பலகைகள் வைப்பதற்கு தடை விதித்து சட்டம் இயற்ற முடியாது.

மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் மட்டும் விளம்பர பலகைகள் வைப்பதால் எந்த விதிமீறல்களும் நடைபெறாது என்று திட்டவட்டமாக கூற முடியாது. எனவே விளம்பர பலகைகள் வைப்பது மற்றும் உரிமம் வழங்குவது தொடர்பாக உரிய விதிகளை தமிழக அரசு ஒரு மாதத்தில் வகுக்க வேண்டும்.

தனியார் நிலத்தில் விளம்பர பலகைகள் வைப்பதற்கு தடை விதிக்கும் விதமாக கொண்டு வரப்பட்ட சட்டத்தை ரத்து செய்கிறோம்’ என்று உத்தரவிட்டுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top