தமிழகத்தில் மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தலில் போட்டியிட திமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தலில் போட்டியிட திமுக வேட்பாளர்கள் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

சென்னை தலைமை செயலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியான தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் திமுக வேட்பாளர்கள் மூவரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், ஐ. பெரியசாமி, தயாநிதி மாறன், கனிமொழி, டி.ஆர்.பாலு.,ஆர்.எஸ். பாரதி, டி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலையில் திமுக வேட்பாளர்கள் மூவரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கலுக்கு 13ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

*தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. இதை தொடர்ந்து ஏற்படும் காலி இடங்களை நிரப்புவதற்காக, இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

*அதன்படி, தேர்தல் அறிவிக்கை மார்ச் 6ம் தேதி (வெள்ளி) வெளியிடப்படும். அன்றைய தினத்தில் இருந்து வேட்பு மனு தாக்கல் ஆரம்பமாகும். வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 13ம் தேதி. மார்ச் 16ம் தேதி வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும்.

*வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக் கொள்வதற்கான கடைசி நாள் 18.3.2020. வாக்குப்பதிவு நாள் 26.3.2020. வாக்குப்பதிவு நேரம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை. அன்றைய தினம் மாலை 5 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

*இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலகத்தின் செயலாளரை தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலகத்தின் கூடுதல் செயலாளரை (பாலசுப்பிரமணியம்) உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் நியமனம் செய்துள்ளது.

*வேட்பு மனுக்களை பிற ஆவணங்களுடன் தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ தலைமை செயலகத்தில் உள்ள அவர்களது அலுவலகத்தில் மார்ச் 6ம் தேதி முதல் 13ம் தேதி வரை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தாக்கல் செய்யலாம்.

*தமிழகத்தில் இருந்து அதிமுக, திமுக சார்பில் தலா 3 மாநிலங்களவை எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.

*இதையடுத்து திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில் ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராக உள்ள திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் திமுக சார்பில் போட்டியிடுவார்கள் என்று குறிப்பிடப்பட்டது.

* இந்நிலையில் அறிவிக்கப்பட்ட 3 வேட்பாளர்களும் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top