அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி 2-வது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

டெல்லி வன்முறைக்கு பொறுப்பு ஏற்று உள்துறை மந்திரி அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் 2-வது நாளாக அமளியில் ஈடுபட்டனர் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது.

பட்ஜெட் கூட்டத்தொடரின்  இரண்டாவது அமர்வுக்காக நாடாளுமன்றம் நேற்று கூடியது.  டெல்லி வன்முறைக்கு பொறுப்பு ஏற்று உள்துறை மந்திரி அமித் ஷா பதவி விலக கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின்  இரு அவைகளும் ஒத்தி வைக்கபட்டது.

இதை தொடர்ந்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று நாடாளுமன்றம் அமைதியாக  செயல்படுவதை உறுதி செய்வதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார்.  அனைத்து கட்சி உறுப்பினர்களையும் நாடாளுமன்றம்  அமைதியாக செயல்பட ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டு கொண்டார்.

இன்று நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை 11 மணிக்கு கூடியதும் டெல்லி வன்முறைக்கு பொறுப்பு ஏற்று உள்துறை மந்திரி அமித் ஷா பதவி விலக கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து மாநிலங்களவை  பிற்பகல்  2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

இது போல்  மக்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை மதியம் 12 மணிவரை ஒத்திவைக்கபட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top