டெல்லி வன்முறையை கண்டித்து மே பதினேழு இயக்கம் மற்றும் படைப்பாளிகள் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் பிப்ரவரி 29 சனி காலை 10 மணிக்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. CAA,NPR,NRC -யை திரும்பப் பெற வலியுறுத்தியும் டெல்லியில் இசுலாமியர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களைக் கண்டித்தும் மே பதினேழு இயக்கம் மற்றும் படைப்பாளிகள் இணைந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

டெல்லியில்  ஆர்.எஸ்.எஸ் செய்த கலவரத்தில் 40க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து இருக்கிறார்கள். இதுவரை குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான  போராட்டங்களில் 79 நாட்களில் 69 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஒரு அறிக்கை சொல்கிறது. இவையனைத்தும் பாஜக ஆளும் மாநிலங்களிலும் அல்லது டெல்லியில் பாஜக வென்ற தொகுதிகளில் மட்டுமே நடந்து இருக்கிறது. டெல்லி உயர்நீதிமன்றம் பாஜக மந்திரி மீதும் பாஜக தலைவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து கைது பண்ணச் சொல்லியும்   இதுவரை யாரும் கைது செய்யப்படாமல் இருப்பது.இந்திய நீதிமன்றத்தை பாஜக எப்படி மதிக்கிறது என்பதை காட்டுகிறது.

“டெல்லியில் நடந்தது போல சென்னையிலும் நடக்கும் சீக்கிரம் வண்ணார் பேட்டையை காலிபண்ணுங்கள்” என்று பாஜக தேசியத் தலைவர் எச் ராஜா மற்றும் முரளிதரராவ் சமூகவலைத்தளங்களில் பரப்புரை செய்து சட்ட ஒழுங்குக்கு சீர் கேட்டை ஏற்படுத்தி இருந்தும் தமிழகத்தில் இவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

தமிழகம் மதம், சாதிக்கு அப்பாற்பட்டு ஒற்றுமையாக இருக்கும் மாநிலம்.இங்கு பாஜகவை சேர்ந்தவர்கள் வட மாநிலங்களில் செய்தது போல சட்டஒழுங்கு சீர்கேட்டை செய்ய தொடர்ந்து முயற்சி எடுப்பதை கண்டித்தும் CAA,NPR,NRC -யை திரும்பப் பெற வலியுறுத்தியும் டெல்லியில் இசுலாமியர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களைக் கண்டித்தும் மே பதினேழு இயக்கம் மற்றும் படைப்பாளிகள் இணைந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்

இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநர் அமீர், இயக்குநர் மீரா கதிரவன், இயக்குநர் சண்முகம், ஒளிப்பதிவாளர் விஜய் சக்ரவர்த்தி, ஆவணப்பட இயக்குநர் அமுதன் மற்றும் மே பதினேழு இயக்கம்,ஒருங்கிணைப்பாளர்  திருமுருகன் காந்தி, ஆகியோர் பங்கேற்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top