ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு தொல்லியல் துறைக்கு வழங்கும்!அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

‘‘தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழாய்வு பணிகள் தொடர்பான முழு அறிக்கையை இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையிடம் மத்திய அரசு ஒப்படைத்துள்ளது. ஆய்வு அறிக்கை விரைவில் வெளியிடப்படும்’’ என்று தமிழ் ஆட்சிமொழி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

நாகர்கோவிலில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகளின் முழு அறிக்கையை மத்திய அரசு இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையிடம் ஒப்படைத்துள்ளது. ஆய்வு அறிக்கை விரைவில் வெளியிடப்படும். மேலும், ஆதிச்சநல்லூரில் விரைவில் அகழ்ஆய்வு  பாதுகாப்பகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்படும். அந்நேரம் ஆய்வறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கிறோம். இப்பணிகளை விரைவாக மேற்கொள்ள மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.என்றார்

மத்திய அரசு எப்படி தொல்லியல் துறையிடம் ஆதிச்சநல்லூர் அகழ் ஆய்வு அறிக்கையை வழங்க முடியும் இதில் பெருத்த சந்தேகம் வருகிறது.மத்திய தொல்லியல் நிறுவனம்தான் ஆதிச்ச நல்லூரை அகழ்ஆய்வு செய்தது.தமிழகத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி தான் அதன் தலைவராக இருந்தார்.அவர் பணி ஓய்வு பெற்றதும் அறிக்கை தயார் செய்வதில் பெரிய சுணக்கம் ஏற்பட்டது.வழக்கு வரை போன பின்புதான் அறிக்கை தயாராகி இருக்கிறது. அப்படியிருக்கையில் தொல்லியல் துறைதான் மத்திய அரசுக்கு இந்த ஆய்வு அறிக்கையை வழங்கவேண்டும்.

ஆனால்,அமைச்சர் பாண்டியராஜன் மத்திய அரசு தொல்லியல் துறையிடம் வழங்கும் என்கிறார் அப்படியானால்,தற்போது அறிக்கை மத்திய அரசிடம்தான் இருக்கிறதா?எப்படி மத்திய அரசிடம் ஆய்வு அறிக்கை போனது.மத்திய தொல்லியல்துறைக்கு வழங்கவேண்டிய அறிக்கையை ஆய்வாளர் சத்திய மூர்த்தி மத்திய அரசிடம் வழங்கி இருக்கிறாரா? அவர் ஏன் மத்திய அரசுக்கு வழங்க வேண்டும்? நேரிடையாக தொல்லியல் துறைக்குதானே சத்திய மூர்த்தி வழங்கியிருக்கவேண்டும்.இது குறித்து அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம் அளிப்பாரா?என தொல்லியல் ஆய்வாளர்கள் கேள்வி கேட்கிறார்கள்    

கடல்சார் தொல்லியல் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு நடப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் வெளியாகலாம். என்றும் அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top