டெல்லி கலவரம்;மேகாலயா கவர்னர் சர்ச்சையான கருத்து! கோர்ட்டுக்கு பயந்து நீக்கம்!!

டெல்லி வன்முறை தொடர்பாக பாஜக வை சேர்ந்த மேகாலய கவர்னர் தத்தகதா ராய்  சர்ச்சையான கருத்து ஒன்றை தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் நேற்று முன்தினம் வெளியிட்டு பிறகு கோர்ட்டுக்கு பயந்து தூக்கி விட்டார்.  

பாஜக தலைவர்கள் வரம்புக்கு மீறி பேசுவதும் மக்கள் விரோத கருத்துக்களை துணிந்து தொலைகாட்சியில் கூட பேசுவது என்பது இயல்பாகி விட்டது.அவர்களை யாரும் கேள்வி கேட்க முடியாது.இந்நிலையில்தான் டெல்லி உயர்நீதிமன்றம் மக்கள் விரோத கருத்துக்களை பேசி வன்முறையை தூண்டி விட்ட பாஜக தலைவர்கள் ,மந்திரி மீதும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தது.இந்த பரபரப்பு முடிவதற்குள் பாஜக ஆளுநர் சர்ச்சையான கருத்து ஒன்றை  வெளியிட்டு இருக்கிறார்  

டெல்லி வன்முறை தொடர்பாக மேகாலய கவர்னர் வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேகாலயா மாநில கவர்னர் தத்தகதா ராய், சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு பெயர் பெற்றவர். அவர் சமீபத்திய டெல்லி கலவரம் குறித்து தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் நேற்று முன்தினம் சர்ச்சைக்குரிய யோசனை ஒன்றை தெரிவித்து இருந்தார்.

கடந்த 1989-ம் ஆண்டு, சீனாவில் பீஜிங்கில் உள்ள தியான்மென் சதுக்கத்தில், ஆளும் கம்யூனிஸ்டு கட்சிக்கு எதிராக பல வாரங்களாக மாணவர்கள் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. ஜூன் 4-ந் தேதி, சீன ராணுவம் தாக்குதல் நடத்தியதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பலியானார்கள். அத்துடன், போராட்டமும் முடிவுக்கு வந்தது.

இதை நினைவுகூர்ந்து தத்தகதா ராய் கூறியிருப்பதாவது:-

பீஜிங், தியான்மென் சதுக்கம் நினைவு இருக்கிறதா? அதை டெங் ஜியோபிங் எப்படி கையாண்டார்? வடகிழக்கு டெல்லியில் தூண்டி விடப்பட்ட கலவரத்தை எப்படி ஒடுக்குவது என்பதை தியான்மென் சதுக்க நிகழ்வில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். இதை எல்லா காம்ரேடுகளும் (தோழர்கள்) ஒப்புக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், பின்னர், இந்த பதிவை கவர்னர் நீக்கி விட்டார்.

இதற்கிடையே, நேற்று அவர் நிருபர்களை சந்தித்தபோது, இதுபற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “நான் டுவிட்டரில் சொன்னது அப்படியே தான் இருக்கிறது. நான் மறுக்கப் போவதில்லை“ என்று கூறினார். மேகாலயா கவர்னர் தத்தகதா ராய் தனது மற்றொரு பதிவில், “அமெரிக்க ஜனாதிபதியின் வருகையையொட்டி, வடகிழக்கு டெல்லியில் கலவரம் தூண்டி விடப்பட்டுள்ளது. ஆனால், உண்மையான ராஜதந்திரியான டிரம்ப், 370-வது பிரிவு, முத்தலாக், குடியுரிமை சட்டம் போன்ற இந்தியாவின் உள்விவகாரங்கள் பற்றி பேசவில்லை. அதனால், இடதுசாரிகள் முகத்தில் கரி பூசப்பட்டது“ என்று கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top