டெல்லியில் ஆர்.எஸ்.எஸ் வன்முறை ஏற்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்புகிறது; டெல்லி காவல் துறை

டெல்லியில் ஆர்எஸ்எஸ் வன்முறை ஏற்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்புகிறது என்று டெல்லி சட்டம் ஒழுங்கு சிறப்பு காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டம் ஒழுங்கு சிறப்பு காவல் ஆணையர் ஸ்ரீவத்ஸ்வா இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது : டெல்லியில் வன்முறை ஏற்பட்ட வடகிழக்கு பகுதிகளில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. என்றார்.

டெல்லி உயர்நீதிமன்றம்   டெல்லியில் ஆர்எஸ்எஸ் காரர்கள் போராட்ட பகுதியில் ஏற்படுத்திய வன்முறைக்கு காரணமான பாஜக மந்திரி உட்பட மற்ற ஆர்எஸ்எஸ்  தொண்டர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய உத்திரவிட்டது மேலும், டெல்லி காவல்துறையின் மெத்தனத்தையும் கேள்விக்குள்ளாக்கியது

இந்நிலையில் சட்டம் ஒழுங்கு சிறப்பு காவல் ஆணையர் ஸ்ரீவத்ஸ்வ இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

“சட்டப்படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த விஷயங்கள் அனைத்தும் இயல்பு நிலை திரும்புவதற்கு பங்களிக்கும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top