விரைவில் திரைப்படமாகவுள்ளது மார்டின் லூதர் கிங்கின் வாழ்க்கை சரித்திரம்.

மார்ட்டின் லூதர் கிங்மனித உரிமைப் போராளி மார்ட்டின் லூதர் கிங்கின் வாழ்கையை அடிப்படையாக கொண்டு ஹாலிவுட் திரைப்படம் ஒன்று உருவாகவுள்ளது.
இப்படத்தை அமெரிக்க முன்னணி நடிகர் பிராட் பிட் மற்றும் உலகப் புகழ்பெற்ற நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்பிரே இணைந்து தயாரிக்கவுள்ளனர்.மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் கடந்த 1963-ம் ஆண்டு, அமெரிக்காவில் கறுப்பு இனத்தவர்களின் சுதந்திரம் மற்றும் வேலை உரிமை ஆகியவற்றை முன்வைத்து  செல்மா எனும் பகுதியில் இருந்து ஏராளமானோர் பேரணியாக அணிவகுத்து சென்றனர்.
சரித்திரப் புகழ்பெற்ற இந்நிகழ்வை, மையமாக கொண்டு இப்படம் தயாராகவுள்ளது.இப்படத்தினை ஏவா டுவெர்னே இயக்கவுள்ளார்.இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் துவங்கியுள்ளது.

கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top