திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயிலில் 505 தங்கக் காசுகள் கொண்ட புதையல்

திருவானைக்காவல் ஜம்புகேசுவரர்- அகிலாண்டேஸ்வரி அம்மன் சந்நிதிக்கு நேரெதிரே பள்ளம் தோண்டும் பொது ஒரு கலசம் கிடைத்தது, அதில் 505 தங்கக் காசுகள் அதில் இருப்பது தெரிய வந்தது அவைகள் எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்பதைக் கண்டறிய தொல்லியல் துறையினர் இன்று ஆய்வு செய்கிறார்கள்.

திருவானைக்காவல்அல்லது திருஆனைக்காவல் எனப்படும் திருவானைக்கோவில் திருச்சிக்கு அருகே அமைந்துள்ள காவேரி ஆற்றின் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் மாபெரும்  சிவன் கோவில் நகரமாகும்.

இதனை திருவானைக்காவல் என்றும் அழைப்பர். சிலர் திருவானைக்கா என்றும் அழைக்கின்றனர்.  அப்பர்,  திருஞான சம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர்,தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன்ஆகியோரால் பாடல் பெற்றதால் இதை பாடல் பெற்ற தலம் என்பர். இச்சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில்ஒன்றான நீருக்கு உரியது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில்சோழ நாடுகாவிரி வடகரைத் தலங்களில்அமைந்துள்ள 60வது  சிவத் தலமாகும்

பல்வேறு சோழ மன்னர்கள் இக்கோயிலுக்கு பல கொடைகளை வழங்கியுள்ளனர், இதை இதுவரை இங்கு கிடைத்துள்ள 156 கல்வெட்டுகள்மூலம் அறியலாம். இவற்றுள் பராந்தக சோழன் பற்றிய கல்வெட்டுகளே மிக தொன்மையானவை.

இந்தக் கோயில் பிரகாரத்துக்குள் அகிலாண்டேஸ்வரி அம்மன் சந்நிதிக்கு நேரெதிரே வெகு காலமாக பயன்படுத்தப்படாத வாழைக்கொட்டம் என்ற இடம் உள்ளது. செடிகொடிகள் முளைத்துக் கிடந்த இந்த இடத்தில் நந்தவனம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, கோயில் உதவி ஆணையர் மாரியப்பன் முன்னிலையில் நேற்று அந்த இடத்தில் பள்ளம் தோண்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது, பித்தளை வடிவ கலசம் ஒன்று கிடைத்தது. அதை எடுத்து திறந்து பார்த்தபோது, 505 தங்கக் காசுகள் அதில் இருப்பது தெரிய வந்தது. இவை, தலா 3.4 கிராம் எடை கொண்டவை எனவும், மொத்த எடை 1,716 கிராம் எனவும் கோயில் அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, வருவாய்த் துறையினரை அழைத்து தங்கக் காசுகளை மீட்டு கருவூலத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார். அதன்பேரில், ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் ஸ்ரீதர் தங்கக் காசுகளை மீட்டு திருச்சி கருவூலத்தில் ஒப்படைத்தார்.

தொடர்ந்து, அந்த தங்கக் காசுகள் எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்பதைக் கண்டறிய தொல்லியல் துறையினர் இன்று ஆய்வு செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top