பாஜக பிடியில் கேஜ்ரிவால்!ஆர்எஸ்எஸ் வன்முறையில் இறந்த இஸ்லாமியர்களுக்கு என்ன செய்ய போகிறார்?

ஆர்எஸ்எஸ் வன்முறைக்கு பலியான பொதுமக்களுக்கு ஒன்றும் செய்யாமல், லால் குடும்பத்துக்கு மட்டும் தலா 1 கோடி ரூபாய் வழங்குவது பாஜகவின் வழிகாட்டுதலில் கேஜ்ரிவால் பயணிப்பது அப்பட்டமாக தெரிகிறது .

 டெல்லியின் மாஜ்பூரில் நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் காரர்கள் வன்முறையை தூண்டியதில்  22 பேர் இறந்திருக்கிறார்கள்.அவர்களுக்கு கேஜ்ரிவால் அஞ்சலி கூட செலுத்தாமல்,தலைமை காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு தலா 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என டெல்லி அரசும், பா.ஜ.க.வும் அறிவித்துள்ளது.டெல்லி மக்களுக்கு கேஜ்ரிவால் மீது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்கள்,அமைதி வழியில் உச்சநீதிமன்றம் சொன்ன வழிகாட்டுதலில் நடந்துகொண்டிருக்கிறது

இதற்கிடையே, தலைநகர் டெல்லியின் மாஜ்பூர் பகுதியில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் காரர்கள் உள்ளே புகுந்து வன்முறை செய்தனர். இதில் தலைமை காவலர் ரத்தன் லால் உயிரிழந்தார். இவர் கோலக்பூரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றியவர்.மேலும் பொதுமக்கள் 22 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்

இந்நிலையில், டெல்லியின் மாஜ்பூரில் நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் சின் வன்முறைக்கு பலியான தலைமை காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு டெல்லி அரசும், பா.ஜ.க.வும் தலா 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளன.அதே சமயம் இறந்துபோன பொதுமக்களுக்கு ஒரு அஞ்சலியை கூட ஆம்ஆத்மி கட்சியும் கேஜ்ரிவாலும் சொல்லவில்லை.இது டெல்லி வாழ் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது . .

இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் பேசிய முதல் மந்திரி கெஜ்ரிவால், மாஜ்பூரில் நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் வன்முறைக்கு பலியான தலைமை காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும். ரத்தன் லால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதேபோல், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும், டெல்லி வன்முறையில் பலியான தலைமை காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு பாஜக சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

கேஜ்ரிவாலுக்கு இந்த தேர்தலில் இஸ்லாமிய மக்கள் அனைவரும் ஓட்டளித்தது பெரும் ஏமாற்றத்தை தந்து விட்டது. பாஜக கைப்பிடியில் சிக்கியுள்ளார் கேஜ்ரிவால் என இஸ்லாமிய சகோதரர்கள் வருத்தம் அடைவது நியாயமானதுதான்.  

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top