டெல்லி ஐகோர்ட் அதிரடி;1984 வன்முறையை போல ஆர்.எஸ்.எஸ் வன்முறையை அனுமதிக்க முடியாது

டெல்லியில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் சின்  வன்முறை மற்றும் உயிரிழப்புகள் தொடர்பாக கருத்து தெரிவித்த ஐகோர்ட், 1984 சம்பவம் போன்று இன்னொரு வன்முறையை அனுமதிக்க முடியாது என தெரிவித்தது.

டெல்லி வன்முறை தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது

வன்முறையால் வடகிழக்கு டெல்லியில் மட்டும் நிலைமை மோசமாக உள்ளது. வன்முறையில் உளவுப்பிரிவு அதிகாரி உயிரிழந்தது துரதிர்ஷடவசமானது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், அங்கு டெல்லி முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் செல்ல வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த இதுவே சரியான தருணம்.

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். 1984 சம்பவம் போன்ற மீண்டும் ஒரு சம்பவத்தை அனுமதிக்க முடியாது. அனைவரும் மிகவும் கவனத்துடன் செயலாற்ற வேண்டும். வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பல்வேறு அமைப்புகளுக்கும் இடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த, வழக்கறிஞர் ஜூபேதா பேகத்தை அமிகஸ் கியூரியாக நியமிக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறும் போது பத்திரிக்கைகளும் சரி ,கோர்ட்டும் சரி ஒன்றும் அறியாத பொது மக்கள் இறந்ததை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் போலீஸ் இறந்ததை மட்டும் பெரிய விசயமாக போகஸ் பண்ணி  பேசுகிறார்கள்.டெல்லி முதல்வரும் அவர்களுக்கு மட்டுமே நிவாரணம் வழங்குகிறார்.என்றார்  

1984ல் இந்திரா காந்தி கொல்லப்பட்டதையடுத்து, சிக்கியர்களுக்கு எதிரான கலவரம் வெடித்தது. இதில் ஏராளமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top