டெல்லியில் ஆர்.எஸ்.எஸ் வன்முறை;காங்கிரஸ் அமைதி பேரணி – பிரியங்கா காந்தி பங்கேற்பு

டெல்லியில் தொடரும் ஆர்.எஸ்.எஸ் வன்முறையை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று அமைதி பேரணி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் உ.பி. கிழக்குப் பகுதி பொது செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார்.

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் வன்முறை செய்ததும், வடகிழக்கு டெல்லியின் மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர், சந்த்பாக் என பல்வேறு இஸ்லாமியர் பகுதிகளுக்குள் சென்ற பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் மசூதிகளை தாக்கியும் துப்பாக்கியால் சுட்டும், பெரும் கலவரங்கள் செய்து கடைகள், வீடுகள், கார்கள் இவைகளை தீவைத்துக் கொளுத்தினார்கள் .

இந்த ஆர்.எஸ்.எஸ் சின் வன்முறை சம்பவங்களில் தலைமை காவலர் ரத்தன் லால், உளவுத்துறை அதிகாரி அன்கிட் சர்மா உள்பட 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, டெல்லி ஆர்.எஸ்.எஸ் வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், டெல்லியில் நிலவும் ஆர்.எஸ்.எஸ் வன்முறைகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் அமைதி பேரணி இன்று மாலை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் உ.பி. கிழக்குப் பகுதி பொது செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். தொண்டர்களுடன் அவர் பேரணியில் நடந்து சென்றார். ஜந்தர் மந்தர் பகுதியில் போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top