பீகார் மாநில சட்டசபையில் ‘என்ஆர்சி அமல்படுத்தமாட்டோம்’ தீர்மானம் நிறைவேற்றம்!

பீகார் மாநிலத்தில் என்ஆர்சி திட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என அம்மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது கண்டு பாஜக அதிர்ச்சியடைந்து உள்ளது  

பீகார் மாநில ஆளும் ஜேடியு கட்சி பாஜகவின் பிரதான கூட்டணி காட்சிகளில் ஒன்று, இன்று பிகாரில் சட்டசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல் மந்திரி நிதிஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, என்ஆர்சி திட்டத்தை அமல்படுத்த மாட்டோம். என்பிஆர் திட்டத்தை 2010-ம் ஆண்டு சரத்து படியே அமல்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

மேலும், தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்) படிவங்களிலிருந்து ‘சர்ச்சைக்குரிய உட்பிரிவுகளை’ தவிர்க்க வேண்டும் எனக்கோரி மத்திய அரசுக்கு பீகார் மாநில அரசு கடிதம் எழுதியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பாஜகவின் கூட்டணியில் இருக்கும் கட்சி என்ஆர்சி திட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று சட்டசபையில் தீர்மானம் இயற்றி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.தமிழ்நாடு இந்த வழியை பின்பற்றி தனது மானத்தை காபாற்றிக் கொள்ளுமா! பொறுத்து இருந்து பார்ப்போம்!

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top