பெண்ணாக இருந்து ஆணாக மாறிய நபரை திருமணம் செய்த மாணவி பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

திண்டுக்கல் மாவட்டத்தில்  பெண்ணாக இருந்து ஆணாக மாறிய நபரை திருமணம் செய்த கல்லூரி மாணவி பாதுகாப்பு கேட்டு போலீஸ் கமி‌ஷனரிடம் மனு அளித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள டி.கூடலூரை சேர்ந்தவர் பவித்ரா (வயது21). ஈரோடு மாவட்டம் செட்டிபாளையத்தை சேர்ந்தவர் விஸ்வந்த் (22). இவர் பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர்.

இவர்கள் 2 பேரும் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கல்லூரியில் படித்து வந்தபோது பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது. இந்த காதலுக்கு பவித்ராவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அவர்கள் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் மதுரை நீதிமன்ற இலவச சட்ட உதவி மையத்தில் ஆஜராகி தஞ்சம் அடைந்தனர். தாங்கள் இருவரும் முழு மனதுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் ஆனால் எங்களை சேர விடாமல் சிலர் தடுத்து வருவதாகவும் கூறினர். இதனையடுத்து அவர்கள் மதுரை போலீஸ் கமி‌ஷனருக்கு கடிதம் எழுதி தங்களுக்கு பாதுகாப்பு தருமாறு மனு அளித்தனர்.

தற்போது பாரதி கண்ணமா என்ற நிறுவனத்தில் அவர்கள் பராமரிப்பில் உள்ளனர். இலவச சட்ட உதவி மையம் தங்கள் வரம்பிற்குள் இதுவராது என்பதால் மதுரை கலெக்டர் மற்றும் போலீஸ் கமி‌ஷனருக்கு மனு அனுப்பி உள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top