டெல்லி வன்முறை;பாஜக,ஆர்.எஸ்.எஸ் கோரத்தாண்டவம்; பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

டெல்லியில் சிஏஏவுக்கு ஆதரவாக பாஜக, ஆர்எஸ்எஸ் காரர்கள் போலீஸ் உதவியோடு சிஏஏவுக்கு எதிராக போராடுபவர்களை கொடூரமாக தாக்கினார்கள்..பாஜக வின் வன்முறை தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. தலைநகர் டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். உச்சநீதிமன்ற கண்காணிப்பில் போராட்டம் எந்த விதமான வன்முறையும் இன்றி ஜனநாயக முறையில் நடைபெற்று வருகிறது .

வடகிழக்கு டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தின்போது ஆர்.எஸ்.எஸ் காரர்கள் வன்முறையை  தூண்டி போராடும் மக்களை தாக்கினார்கள். பாஜக ஏற்படுத்திய வன்முறையில் நேற்று தலைமை காவலர் ரத்தன் லால் உயிரிழந்தார்.

சிஏஏ எதிர்ப்பு போராட்டம் எங்கெங்கு நடைபெறுகிறதோ அங்கே  சிஏஏ ஆதரவாளராக ஆர்.எஸ்.எஸ் காரர்கள் சென்று வன்முறையை தூண்டுகிறார்கள்   பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. கல்வீச்சில் ஏராளமான வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பதற்றம் நிறைந்த பகுதிகளில் போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வன்முறையில் நேற்று மாலை வரை 4 பேர் உயிரிழந்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட வன்முறை 3-வது நாளாக இன்றும் தொடர்ந்தது. இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.மத்தியில் ஆளும் பாஜகவுக்கு ஆதரவாக டெல்லி ஆம்ஆத்மி அரசும் செயல்படுவதாகவும் தவறுதலாக நம்பி வாக்களித்து விட்டோம் என்று டெல்லி மக்கள் புலம்புகிறார்கள்   

இந்த வன்முறையில் காயமடைந்த 150 பேர் டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.வன்முறையைத் தொடர்ந்து வடகிழக்கு டெல்லியில் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்த மோதலை படம் பிடிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் ஆர்.எஸ்.எஸ் காரர்களால் கடுமையாக தாக்கப்பட்டனர்.

டெல்லியில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top