இந்தியாவை குஜராத் மாடலாக மாற்றும் இந்துத்துவ பயங்கரவாதம்; படங்கள்…

டெல்லி ஜாப்ராபாத் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களை நோக்கி சிஏஏ ஆதரவு இந்துத்துவ கும்பல் கற்களை வீசி தாக்கினர் .போலீஸ் துணையோடு துப்பாக்கியால் சுட்டனர்

மாஜ்பூர் மற்றும் ஜாப்ராபாத் பகுதியில் போராட்டக்காரர்கள் மீது இந்துத்துவ கும்பல்  2 வீடுகள் மற்றும் ஒரு தீயணைப்பு வாகனத்திற்கு தீ வைத்துள்ளனர்.

மனிதத்தன்மை அற்று இஸ்லாமியர்களை கத்தியால் வெட்டினர்.பெண்களை மானபங்கம் படுத்தினர்.குஜராத்தில் நடந்தது போல இந்தியாவெங்கும் நடத்த திட்டமிட்டிருப்பது தெரிகிறது.இந்த நேரத்திலாவது ஜனநாயக சக்திகள் விழித்துக்கொள்ளவேண்டும்.

பத்திரிகைகள் இவை எதையும் பதிவு செய்யாது மோடியும் ட்ரம்பும் கொஞ்சி குலாவியதை எழுதிக்கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம்  காரணம், உச்சநீதிமன்றமே! குடியுரிமை சட்டத்திருத்தம் பற்றி வழக்கு வருகிற போது நாடெங்கும் போராட்டம் வெடித்தது. ஆனால், எதையும் உச்சநீதிமன்றம்  கண்டுகொள்ளாமல் இருந்து விட்டது. குறைந்தபட்சம்  வழக்கு கோர்ட்டுக்கு வந்ததும் தற்காலிக தடைவிதித்திருந்தால் எல்லா போராட்டமும் வாபஸ் பெறப்பட்டிருக்கும். இந்தியாவின் ஜனநாயகம் காப்பற்றப்பட்டிருக்கும்.இன்று இரத்த ஆறு ஓடுகிறது  

மனிதம் என்று ஒன்று இனி இல்லை. மரணம் மட்டுமே இங்கு எஞ்சியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top