ட்ரம்ப்புக்கு அளவுக்கு அதிக வரவேற்பு; இரண்டு நாள் இந்திய நிகழ்ச்சிப் பட்டியல்

இந்தியாவுக்கு இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக வருகை தரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அதிகாரபூர்வ நிகழ்ச்சிப் பட்டியலை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்பை வரவேற்பதில் அளவுக்கு அதிகமாக இந்தியா முனைப்பு காட்டுகிறது அதை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனக்கு சாதகமாக ஆக்கி கொள்கிறார்.இடை இடையே மோடியை இந்தியாவை கிண்டல் அடித்துக்கொள்கிறார் “எனக்காக நண்பர் மோடி எழுபது லட்சம் இந்தியர்களை தெருவில் நிறுத்தப் போகிறார் என கிண்டல் அடித்திருக்கிறார்.

காஸ்மீர் விசயத்தில் உலக அளவில் மோடிக்கு பெரிய கேட்ட பெயர் உருவாகி விட்டது. அதை சரி செய்ய ட்ரம்ப் வருகையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார் மோடி.அதற்காக அளவுக்கு அதிகமாக வரவேற்புகள் தடபுடலாக இருக்கிறது.

வெளியுறவுத் துறை அமைச்சகம் பட்டியலிட்டுள்ள ட்ரம்ப்பின் நிகழ்ச்சி நிரல் அட்டவணை:

பிப்ரவரி 24 திங்கள்

11.40 மணி – அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வருவார்.

12.15 மணி – சபர்மதி ஆசிரமம் (அகமதாபாத்).

13.05 மணி – மோதிரா விளையாட்டு அரங்கத்தில் ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்வு.

15.30 மணி – ஆக்ராவுக்கு விமானத்தில் புறப்பாடு.

16.45 மணி – ஆக்ராவுக்கு வருகை.

17.15 மணி – தாஜ்மஹால் பார்வையிடல்.

18.45 மணி – டெல்லிக்கு விமானத்தில் புறப்பாடு.

19.30 மணி – டெல்லிக்கு வந்து சேருதல்.


பிப்ரவரி 25 செவ்வாய்

10.00 மணி – ராஷ்டிரபதி பவனில் சடங்கு வரவேற்பு.

10.30 மணி – ராஜ்காட்டில் மகாத்மா காந்தியின் சமாதியில்    மலர் அஞ்சலி செலுத்துதல்.

11.00 மணி – ஹைதராபாத் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு.

12.40 மணி – ஹைதராபாத் மாளிகையில் ஒப்பந்தங்கள் பரிமாற்றம் / பத்திரிகையாளர் சந்திப்பு.

19.30 மணி – குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் ராஷ்டிரபதி பவனில் சந்திப்பு.

22.00 மணி – புறப்படுதல்.

இதனை வெளியுறவுத் துறை  அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top