“தேசம் காப்போம்’ பேரணி; சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக விசிக தீர்மானம்

சிஏஏ, என்பிஆர்,என்.ஆர்.சி   ஆகிய சட்டங்களைக் கைவிட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கைவிட வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து வலியுறுத்துகிறது. இதனை வலியுறுத்தி பல்வேறு கட்ட பொதுக்கூட்டங்கள், போராட்டங்களை அக்கட்சி நடத்தியது.

இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று (பிப்.22) திருச்சியில் ‘தேசம் காப்போம்’ பேரணி நடைபெற்றது. தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும், இந்திய குடியுரிமைப் பதிவேடு சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் பேரணி திருச்சி எம்ஜிஆர் சிலையிலிருந்து உழவர் சந்தை வரை நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டார். அதன்பிறகு உழவர் சந்தையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மேலும், திருமா பேசும் போது “ஒடுக்கப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு யாரும் போட்ட பிச்சை அல்ல அது அரசியலமைப்பு சட்டம் வழங்கிய நீதி”என திமுக ஆர்.எஸ் பாரதிக்கு பதிலளிக்கும் வண்ணம் தெரிவித்தார்    

இந்தப் பேரணியின் இறுதியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1.குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுக.

2. தேசிய மக்கள் தொகைப் பதிவேடு நடவடிக்கையைக் கைவிடுக.

3.  தேசியக் குடிமக்கள் பதிவேடு திட்டத்தை ரத்து செய்க.

4. இட ஒதுக்கீடு உரிமையைப் பாதுகாத்திடுக!

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top