இந்துத்துவா சக்திகள் கலவரம்; டெல்லியில் சிஏஏ எதிர்ப்பாளர்கள் இடையே போலீஸார் கண்ணீர் புகை வீச்சு

மத்திய அரசு கொண்டுவந்து குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நாடெங்கும் தன்னெழுச்சியாக நடந்து வருகிறது.உச்சநீதிமன்றமோ இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் அமைதி காக்கிறது. இந்நிலையில் சிஏஏ சட்டத்துக்கு ஆதரவாக போராடுபவர்கள் மீது இந்துத்துவா சக்திகள் கற்களை வீசி கலவரம் செய்தது

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஷாகீன் பாக் பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே டெல்லியின் தென்கிழக்குப் பகுதியான ஜாப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று இரவு முதல் முஸ்லிம்பெண்கள் 500-க்கும் மேற்பட்டோர் சிஏஏவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் ,போலீஸ் ஜாப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையத்தை மூடி   கதவுகள் பூட்டப்பட்டு பலத்த போலீஸார் பாதுகாப்பு போடப்பட்டது.

பெண்கள் கைகளில் தேசியக் கொடி ஏந்தியும், சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றுக்கு எதிரான பதாகைகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டம் நடப்பதால் சீலம்பூர் மற்றும் மஜ்பூர், யமுனா விஹார் இடையிலான 66-வது சாலைப் போக்குவரத்தையும் போலீஸ் துண்டித்து விட்டது. வேறு வழியாக மக்கள் சென்றுகொண்டிருந்தனர் . இதையடுத்து போலீஸார் போராட்டக்காரர்களிடமும், பெண்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அவர்கள் சிஏஏவை திரும்பப் பெறும்வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்தனர். இந்நிலையில் அங்கு பெண் போலீஸார் ஏராளமானோர் குவிக்கப்பட்டனர்.

ஜாப்ராபாத் பகுதியில் சாலை மூடப்பட்டிருப்பதைக் கண்டித்து சிஏஏவுக்கு ஆதரவாகச் சில இந்துத்துவ சக்திகள்  இன்று பிற்பகலில் திரண்டனர். போலீஸ் இந்துத்துவ சக்திகள் ஒன்று திரள்வதை தடுக்கவில்லை.

போராட்டக்காரர்கள் போலீஸ்ஸிடம் புகார் கொடுத்தன போலிஸ் கண்டுகொள்ளவில்லை. பிறகு,  போராட்டம் நடத்திகொண்டிருந்த சிஏஏ எதிர்ப்பாளர்களும் திரண்டனர். இதை அறிந்து இந்துத்துவாவை சேர்ந்த நபர்கள் போராட்டக்காரர்களை நோக்கி கற்களையும், பாட்டில்களையும் வீசினர். போராட்டக்காரர்கள் அவர்களை விரட்டி அடித்தனர். போலீஸ் நன்றாக வேடிக்கை பார்த்தது அந்த இடமே கலவரக் கோலமாக மாறியும் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை

பிறகு ,இந்துத்துவ சக்திகள் கற்களையும், பாட்டில்களையும் வீசி தாக்கியதால் நிலைமையைக் கட்டுப்படுத்த போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தினரைக் கலைத்தனர். இதன் காரணமாக, மஜ்பூர்-பாபர்பூர் இடையிலான மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன

இதையடுத்து அங்கிருந்த போலீஸார் இரு தரப்பினரையும் விரட்ட முயன்றும் முடியாததால், கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தினரைக் கலைத்தனர். அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது.

டெல்லி மாநில பாஜக தலைவர் கபில் மிஸ்ரா ட்விட்டரில் கூறுகையில், “டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், சாந்த்பாக் சாலையைச் சீரமைத்து, மக்கள் போக்குவரத்துக்கு வழி ஏற்படுத்தித் தர போலீஸாருக்கு . நாட்கள் அவகாசம் தருகிறோம். டெல்லியில் உள்ள போராட்டக்காரர்கள் மக்களுக்குப் பெரும் இடையூறு விளைவிக்கிறார்கள். அதனால்தான் போலீஸார் சாலையை மூடியுள்ளனர். அதனால்தான் அந்தப் பகுதி கலவரக் கோலமாகக் காட்சி அளிக்கிறது. நாங்கள் யாரும் கல்வீசவில்லை. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வந்து திரும்பும் வரை, அமைதியாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top