தரமற்ற அடையாறு வெள்ளத் தடுப்பு சுவர் ; பல்லாயிரம் கோடி விரயம்;திமுக போராட்டம்;ஸ்டாலின் ட்விட்

அடையாற்றில் கட்டப்பட்டு வரும் வெள்ளத்தடுப்பு சுவர் தரமற்றதாக இருப்பதைக் கண்டித்து சென்னை தெற்கு மாவட்ட தி.மு. கழக சார்பில் மா.சுப்பிரமணியன் தலைமையில் ஆற்றினுள்ளேயே இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஒவ்வொரு மழைக் காலத்திலும் வெள்ளப் பாதிப்புக்குள்ளாகும் மக்கள் போராடுவதும் இந்த அரசு நடவடிக்கை எடுப்பதாக சொல்வதும் வாடிக்கையாகி போய்விட்டது.பல போரட்டங்களுக்கிடையில் வெள்ளத் தடுப்பு சுவர் கட்ட நடவடிக்கை எடுத்து இருந்தாலும் அதில் பல ஊழல் நடப்பது அப்பட்டமாக தெரிந்து இருந்தும் இந்த அரசு நடவடிக்கை எடுப்பதில்லை  

இது தொடர்பாக தமிழக அரசின் பொதுப்பணித் துறை செயலாளருக்கு மா.சுப்பிரமணியம் கடிதங்கள் எழுதி உள்ளார்

பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுக்காததால்,மக்களை திரட்டி இன்று அடையாற்றில் கட்டப்பட்டு வரும் வெள்ளத்தடுப்பு சுவர் தரமற்றதாக இருப்பதைக் கண்டித்து,அங்கு மணல் அள்ளப்படுவதை கண்டித்தும் சென்னை தெற்கு மாவட்ட தி.மு. கழக சார்பில் மா .சுப்பிரமணியன் தலைமையில் ஆற்றினுள்ளேயே இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவு செய்து இருக்கிறார்

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top