சிம்பு – செல்வராகவன் இணையும் படம் எப்போது?

simbu1இரண்டாம் உலகம் படத்தின் மெகா தோல்வியினால் செல்வராகவனை திரையுலகம் சுத்தமாக மறந்துவிட்டது. அவர் பெயரை சொன்னாலே தயாரிப்பாளர்கள் அலறி ஓடுமளவுக்கு நிலவரம் கலவரம் ஆனநிலையில், தன் தம்பி தனுஷ் மூலம் சிம்புவை அணுகினார் செல்வராகவன்.

செல்வராகவனிடம் கதை கேட்க ஒப்புக்கொண்ட சிம்பு, சில மாதங்கள் காத்திருக்கவிட்டு பிறகு செல்வராகவனிடம் கதை கேட்டார். கதை கேட்டபோது, ஏகப்பட்ட கண்டிஷன்களையும், கரெக்ஷன்களையும் சொல்லி செல்வராகவனின் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் சிம்பு.

சிம்புவும், செல்வராகவனும் இணைந்து பணியாற்றப் போகும், அந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கப் போவதாகவும் செய்திகள் அடிபட்டன.

கூடுதல் தகவலாக, அண்மையில் வெளியான ‘வாய் மூடி பேசவும்’ படத்தை தயாரித்த ரேடியன்ஸ் மீடியா படநிறுவனம் தான் செல்வராகவன் இயக்கும் படத்தைத் தயாரிக்கப் போவதாகவும் சொல்லப்பட்டது.

ஆனால், ரேடியன்ஸ் மீடியா நிறுவனத்தின் உரிமையாளரான வருண் மணியன் சொல்வதைப் பார்த்தால் சிம்பு – செல்வராகவன் இணையும் படத்தை அவர் தயாரிக்க மாட்டார் என்றே தோன்றுகிறது.

அப்படி என்ன சொன்னாரய்யா?
“செல்வராகவன் , ‘இரண்டாம் உலகம்’ படத்தை இயக்கியபோது அவருக்கும் அந்த படத்தைத் தயாரித்த பிவிபி நிறுவனத்துக்கும் ஏதோ பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன.

அவற்றை அவர் சரி செய்தால்தான், அவர் இயக்கும் புதிய படத்தை நான் தயாரிப்பேன். இல்லை என்றால் நான் தயாரிக்க வாய்ப்பில்லை” என்று தெரிவித்திருக்கிறார் வருண்மணியன்.

ஆக…சிம்பு – செல்வராகவன் கூட்டணி கை கோர்க்கும் படம் இப்போதைக்கு இல்லை என்பதே இறுதி நிலவரம்!


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top