பொருளாதாரம் மந்தநிலையை ஒப்புக் கொள்ளாத அரசால் பொருளாதாரத்தை சரிசெய்ய முடியாது -மன்மோகன் சிங்

பொருளாதாரம் மந்தநிலை என்பதை ஒப்புக் கொள்ளாத அரசால் பொருளாதாரத்தை சரிசெய்ய முடியாது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

பொருளாதார நிபுணரும், திட்ட கமிஷன் முன்னாள் துணைத் தலைவருமான மான்டேக் சிங் அலுவாலியாவின் “பேக்ஸ்டேஜ்”  என்ற புத்தக அறிமுக விழாவில் புத்தகத்தை அறிமுகப்படுத்தி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:-

உண்மையான ஆபத்து என்னவென்றால் பொருளாதார பிரச்சினைகள் அங்கீகரிக்கப்படாவிட்டால், சரியான நடவடிக்கை எடுக்க நம்பகமான பதில்களைக் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை. நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை நீங்கள் அடையாளம் காணவில்லை எனில், சரியான நடவடிக்கை எடுக்க நம்பகமான பதில்களை நீங்கள் கண்டுபிடிக்க முடியாது.

இந்த பிரச்சினைகள் விவாதிக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் இன்று ஒரு அரசு மந்தநிலை போன்ற ஒரு சொல் இருப்பதைக்கூட ஒப்புக் கொள்ளவில்லை. இது நம் நாட்டுக்கு நல்லதல்ல. பொருளாதாரம்  மந்தநிலை என்பதை ஒப்புக் கொள்ளாத அரசால் பொருளாதாரத்தை சரிசெய்ய முடியாது என்று நான் நினைக்கிறேன் என கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top