ஐபிஎல் 2020 அட்டவணை வெளியீடு; மார்ச்சிலிருந்து எம்எஸ் டோனி பயிற்சியை தொடங்குகிறார்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 2020 ஆண்டுக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்து உள்ளது    

.ஐபிஎல் 2020 சீசன் அடுத்த மாதம் 29-ந்தேதி தொடங்குகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

கடந்த மூன்று வாரங்களாக ரெய்னா, அம்பதி ராயுடு ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அணியின் கேப்டனான எம்எஸ் டோனி மார்ச் 1-ந்தேதி அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிக்குப்பின் எம்எஸ் டோனி இந்திய அணியில் இடம் பெறாமல் உள்ளார்.

மார்ச் 1-ந்தேதி சென்னை வந்து பயிற்சியில் ஈடுபடும் எம்எஸ் டோனி இரண்டு மூன்று வாரங்கள் பயிற்சி மேற்கொண்ட பின், நான்கு அல்லது ஐந்து நாட்கள் சொந்த ஊர் செல்வார் என்றும், அதன்பின் போட்டி தொடங்குவதற்கு முன் அணியில் இணைவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top