சிஏஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சிக்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகள் நியமனம்

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம், என்.பி.ஆர் இவை இரண்டையும் மக்கள் விருப்பத்திற்கு மாறாக எப்படியாயினும் நிறைவேற்றி தீரவேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு செயல்படுகிறது.

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம், என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி.க்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்கவும்,கட்டுப்படுத்தவும் 6 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய மூன்றுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த போராட்டங்களை கண்காணிக்க  6 சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக டிஜிபி உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக டிஜிபி திரிபாதி பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:

குடியுரிமை திருத்த சட்டம், என்.பி.ஆர்., என்.ஆர்.சி.க்கு எதிராக நடக்கும் போராட்டங்களை கண்காணிக்கவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் 6 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மதுரைக்கு அபய்குமார் சிங், நெல்லைக்கு மகேஷ்குமார் அகர்வால், முருகன், தேனிக்கு பாஸ்கரன்,  தூத்துக்குடிக்கு மகேந்திரன், திண்டுக்கலுக்கு ஜி.ஸ்டாலின் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அதிகாரிகளை ஒருங்கிணைத்து சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top