தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கையுடன் இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம்; மந்திரிசபை ஒப்புதல்

சர்வதேசத்தால் இனப்படுகொலை குற்றவாளி என அறியப்படுகிற மகிந்த ராஜபக்சே சமீபத்தில் இந்தியா வந்து  மோடியை சந்தித்தார்.தொடர்ந்து மோடி அரசு தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கையோடு மிக நெருக்கமாக இருக்கிறது தெரிந்த விசயமே  

இந்த முறை இந்தியா சுற்றுப்பயணம் வந்த இனப்படுகொலை குற்றவாளியும் , இலங்கை பிரதமருமான  ராஜபக்சே, டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேசினார்.அப்போது பல ஒப்பந்தங்கள் பேசப்பட்டன. அவைகள் வெளியே சொல்லப்படாமல் இருந்தன

இப்போதுதான் இந்தியா-இலங்கை இடையே இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் செய்து கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது. என தெரிய வருகிறது.

பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில், இந்தியா-இலங்கை இடையே இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் செய்து கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது. வரிஏய்ப்பை தடுக்கும் நோக்கத்தில், இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது.

3 பொதுத்துறை பொது காப்பீட்டு நிறுவனங்களுக்கு ரூ.2 ஆயிரத்து 500 கோடி மூலதனமாக வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளில், சம்பந்தப்பட்ட வரி செலுத்துவோர் உரிய வரியை செலுத்தி, வட்டி தள்ளுபடி மற்றும் அபராத தள்ளுபடி சலுகையை பெறும் திட்டம், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இதுதொடர்பான மசோதாவில் திருத்தம் செய்ய மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. கடன் வசூல் தீர்ப்பாயங்களில் உள்ள வழக்குகளுக்கும் பொருந்தும் வகையில் இந்த திருத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவல்களை மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top