காஸ்மீர் விடுதலை போராளி ஜீலானியின் உடல்நிலை குறித்த செய்திகள்;மீண்டும் இணையசேவை முடக்கம்

காஷ்மீர் விடுதலை போராட்டத் தலைவர், ஹூரியத் மாநாட்டுக் கட்சி தலைவர்  சையத் அலி ஷா ஜீலானியின் உடல்நலம் குறித்த செய்திகள் பரவியதும், காஷ்மீரில் இணைய சேவைகள் மீண்டும் முடக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த  ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது.  ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும்  பிரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து  செய்திகள் பரவி மக்கள் தங்களது உரிமைக் குரலை எழுப்பக் கூடாது என்பதற்காக ஜம்மு காஷ்மீரில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இணையதள சேவைகள், தொலைபேசி இணைப்புகள் ஆகியவை முடக்கப்பட்டன.

உலக நாடுகள் காஸ்மீரின் நெருக்கடி நிலையை பேச ஆரம்பித்ததும்  சமீபத்தில் படிப்படியாக  இணையதள சேவைகள், தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் தற்போது அங்கு மீண்டும் இணைய தள சேவை  முடக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் விடுதலை போராட்டத் தலைவர், ஹூரியத் மாநாட்டுக் கட்சி தலைவர்  சையத் அலி ஷா ஜீலானியின் உடல்நலம் குறித்த செய்திகள் பரவியது. 90 வயதான ஜீலானியின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக சில சமூக ஊடக பதிவுகளில் செய்தி பரவியது. இதையடுத்து புதன்கிழமை இரவு   இணையதள சேவைகள், மொபைல் இணைய சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

காஷ்மீரில் பதற்றம் நிறைந்த  பகுதிகளாக சில இடங்களை அரசு தீர்மானித்து இருக்கிறது. பாதுகாப்பு  பலப்படுத்தப்பட்ட பகுதியாகவும் அதை சித்தரிக்கிறது

ஜீலானி  சில ஆண்டுகளாக  உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார் ஆனால் அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது என  அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top