கிரண்பேடியால் ஆளுநர் பதவிக்கு இழுக்கு; முதல்வர் நாராயணசாமி விமர்சனம்

கிரண்பேடியால் ஆளுநர் பதவிக்கு இழுக்கு என, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் குடியுரிமைச் சட்டத் திருத்தம் தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றக் கூடாது என்று பாஜக நியமன எம்எல்ஏக்கள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் மனு தந்தனர். அதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றவோ, விவாதிக்கவோ கூடாது என, முதல்வர் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இரு நாட்களுக்கு முன்பு கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், இன்று (பிப்.12) புதுச்சேரி சட்டப்பேரவையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன் பின்னர், சட்டப்பேரவை வளாகத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி எழுதிய கடிதத்தைப் பிரிப்பதாகத் தெரிவித்த முதல்வர் நாராயணசாமி, “துணைநிலை ஆளுநர் அனுப்பிய கடிதத்தை இப்போதுதான் பிரிக்கிறேன். ரகசியமான இக்கடிதம் இதற்கு முன்பே வாட்ஸ் அப்பில் வந்துவிட்டது. முக்கிய கடிதப் போக்குவரத்தை பத்திரிகைகளுக்கு கிரண்பேடி கொடுத்ததால் நாம் அவரைப் புரிந்துகொள்ள வேண்டும். கிரண்பேடியால் ஆளுநர் பதவிக்கு இழுக்கு. அப்பதவிக்கு அவர் தகுதியில்லை. அதை கிரண்பேடி நிரூபித்துக் காட்டியிருக்கிறார்” என்று தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top