டெல்லியில் ஆம்ஆத்மி வெற்றி ஊர்வலத்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி; மற்றொருவர் காயம்

துப்பாக்கி தீவிரவாதத்தை உருவாக்கும் ஆர்.எஸ்.எஸ் ஜனநாயக சக்திகள் எதிர்ப்பு!

டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஆம்ஆத்மி கட்சி தனது தொண்டர்களை உற்சாக படுத்த  வெற்றி ஊர்வலம் நடத்தியது. வெற்றி ஊர்வலத்தில் நேற்றிரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் அக்கட்சியின் தொண்டர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஒருவர் காயமடைந்தார்

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 70 தொகுதிகளில் 62 தொகுதிகளைக் கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. கேஜ்ரிவால் மீண்டும் முதல்வராகிறார்.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மெஹ்ராலி தொகுதி எம்.எல்.ஏ., நரேஷ் குப்தா கோயிலுக்குச் சென்றுவிட்டு ஊர்வலமாக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டே திறந்தவாகனத்தில் திரும்பியபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதில் நல்வாய்ப்பாக நரேஷ் யாதவ் உயிர்பிழைத்தார். ஆனால், அவரது பின்னால் நின்றுகொண்டிருந்த அசோக் மான் என்ற ஆம் ஆத்மி தொண்டர் பரிதாபமாக பலியானார்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான நிலையில், குண்டு பாயும் நொடிவரை அசோக் மான் புன்னகையுடன் மக்களுக்கு வெற்றிச் சின்னத்தைக் காட்டி உற்சாகமாக பயணிப்பது தெரிகிறது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இவர்களில் ஒருவர் போலீஸில் சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொலை செய்யும் நோக்கிலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக ஒப்புக்கொண்டார்.

இது தொடர்பாக செய்தி நிறுவனங்களுக்கு எம்.எல்.ஏ. நரேஷ் யாதவ் அளித்த பேட்டியில், “துப்பாக்கிச் சூடு சம்பவம் சரியாக இரவு 10,30 மணிக்கு நடந்தது. சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் போலீஸார் தெளிவாக ஆராய்ந்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். இந்த தாக்குதலுக்குப் பின்னால் உள்ள காரணம் எனக்குத் தெரியாது. ஆனால், அடுத்தடுத்து 4 குண்டுகள் நான் நின்ற வாகனத்தை நோக்கிப் பாய்ந்தபோது நான் இறந்துவிடுவேன் என்றே நினைத்தேன்” என்றார்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுபவர்கள் மீது பாய்ந்த துப்பாக்கி குண்டு இன்று அரசியல் எதிரிகள் மீது பாய்கிறது  

பாஜகவின் இந்த துப்பாக்கி கலாச்சாரம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசியல் எதிரிகளை துப்பாக்கியால் சுடும் கலாச்சாரத்தை ஒற்றை அணியில் நின்றுஎல்லா கட்சிகளும் எதிர்க்க வேண்டும். நாடு முழுவதும் தொடர் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது பல மாநிலங்கள் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.பொதுமக்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள்.ஆனாலும் உச்சநீதிமன்றம் வேடிக்கை பார்த்துகொண்டு இருக்கிறது.

உச்சநீதிமன்றத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வழக்கில் தற்காலிக தடை கொடுத்திருந்தால் நாட்டில் நடைபெறும் அனைத்து போராட்டமும் நின்று இருக்கும்.பாஜகவின் அமைச்சர் பொதுவெளியில் போராடுபவர்களை ‘கோலி மாரோ’ –துப்பாக்கியால் சுடு என்கிறார்.அதன் பிறகு மூன்று இடத்தில் துப்பாக்கி சூடு நடந்து இருக்கிறது அப்போதும் உச்சநீதிமன்றம் வேடிக்கை பார்க்கிறது.அமைச்சர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

இந்துத்துவா அமைப்புகள் துப்பாக்கி தீவிரவாதத்தை உருவாக்கி வருகிறார்கள் இன்னும் உச்சநீதிமன்றம் வேடிக்கை பார்ப்பதில் அர்த்தம் இல்லை உடனடியாக ஆளும் பாஜக கட்சிக்கு அறிவுரை சொல்லவேண்டும் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்பை தடை செய்யவேண்டும் என்று ஜனநாயக சக்திகள் விரும்புகிறார்கள்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top