குடியுரிமை திருத்தச்சட்டம்;எதிராக புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம்:மனிதநேய மக்கள்கட்சி வரவேற்பு!

“கருப்பு சட்டமான குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அதனுடன் இணைந்துள்ள கருப்புச் சட்டங்களான என்பிஆர் மற்றும் என்ஆர்சிக்கு எதிராக இன்று 12.02.2020 புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை மனிதநேய மக்கள் கட்சி மனமார வரவேற்கிறது”.என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்

“இந்த தீர்மானத்தை நிறைவேற்றக் கூடாது என்ற மத்திய அரசின் கைப்பாவை ஆளுநர் கிரண்பேடியின் எச்சரிக்கையையும் மீறி, “ஆட்சியே பறிபோனாலும் பரவாயில்லை” என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்து, “குடியுரிமை திருத்தச் சட்டம் ஜனநாயகத்துக்கு எதிரானது. சட்டத்தை செயல்படுத்தினால் வரலாற்றுப் பிழை ஏற்படும்” எனக் கூறி திமுகவின் ஆதரவுடன் தீர்மானம் சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.

புதுச்சேரியில் எதிர்க்கட்சியாக இருக்கும் என்.ஆர்.காங்கிரசும், அதிமுகவும் தீர்மானத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளன. இதன்மூலம் இந்தக் கட்சிகள் இந்த சட்டத்திற்கு ஆதரவாகவும், பாஜகவுக்கு விசுவாசமாகவும் உள்ளதை வெளிப்படையாக அறிவித்துள்ளன.

ஆட்சியை டிஸ்மிஸ் செய்தாலும் பரவாயில்லை எனக்கூறி தீர்மானத்தை உறுதியாக நிறைவேற்றிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மனதார பாராட்டுகிறேன். தொலைபேசி வாயிலாகவும் அவருக்கு எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்” இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top