மேற்கு வங்கம் துர்காபூரில் சிஏஏ, என்ஆர்சி எதிர்ப்பு பேரணி – முதல் மந்திரி மம்தாபானர்ஜி பங்கேற்பு

மேற்கு வங்காளத்தின் துர்காபூரில் குடியுரிமை சட்டத்திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை கண்டித்து நடைபெற்ற பேரணியில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

இதற்கிடையே, மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்ற பல்வேறு பேரணிகளில் கலந்து கொண்டார்.

இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலம் துர்காபூரில் குடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை கண்டித்து இன்று பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். இதில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் அப்பகுதி முழுவதும் ஸ்தம்பித்தது. அப்போது அவர், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top