காங்கிரஸ் வேட்பாளர்கள் 63 பேர் டெல்லி சட்டசபை தேர்தலில் டெபாசிட் இழந்தனர்

டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் 63 பேர் தங்களது டெபாசிட்டுகளை இழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அறுதிப் பெரும்பான்மை வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.

அரவிந்த கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக முதல் மந்திரியாக பொறுப்பேற்கிறார். ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியை டெல்லி முழுவதும் அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் 63 வேட்பாளர்கள் தங்களது டெபாசிட்டுகளை இழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் அரவிந்தர் சிங் லவ்லி, தேவேந்தர் யாதவ் மற்றும் அபிஷேக் தத் ஆகியோர் மட்டுமே  தங்கள் டெபாசிட்டுகளை பெற்றுள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் கீழ் டெல்லியை 15 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி, டெல்லி சட்டசபைத் தேர்தலில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஒரு இடத்தைக்கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top