டெல்லி தேர்தல்; ஆம் ஆத்மி முன்னிலை; தொண்டர்கள் மகிழ்ச்சி பாஜக பின்னடைவு

ஒரு  பரபரப்பான சூழலில் டெல்லி சட்டசபை தேர்தல் நடந்து முடிந்து இன்று காலையிலிருந்து ஓட்டு எண்ணிக்கை துவங்கியது

70 உறுப்பினர்களை கொண்டடெல்லி சட்டசபை தேர்தலுக்கு வாக்கு பதிவு, கடந்த 8ந்தேதி காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை அமைதியுடன் நடைபெற்று முடிந்தது.

இந்த தேர்தலில், டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி, பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவியது.  ஆட்சியை தக்கவைக்க ஆம் ஆத்மியும், ஆட்சியை பிடிக்க பா.ஜனதாவும் பேரணிகள், பிரசாரங்கள் என கடுமையாக அரசியல் பணிகளில் ஈடுபட்டன.இதில் காங்கிரஸ் சத்தமே இல்லாமல் இருந்தது

தேர்தலுக்கு பின் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என ஒரு தரப்பிலும், பா.ஜ.க. அமோக வெற்றி பெறும் என அக்கட்சியினரும் கூறி வந்தனர்.  இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.  முதலில் தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.  இவற்றில் ஆம் ஆத்மி முன்னிலையில் இருந்தது.

டெல்லி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 36 உறுப்பினர்கள் தேவை.  இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி காலை 9 மணி நிலவரப்படி 52 இடங்களில் முன்னிலையில் இருந்தது.  பா.ஜ.க. 14இடங்களில் முன்னிலை வகித்தது.  இதனால் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளுக்கு எந்த இடமும் கிடைக்கவில்லை.

இதனிடையே, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆம் ஆத்மி 52 இடங்களிலும், பா.ஜ.க. 14 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.  அதிக தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது.  இதனால் 3வது முறையாக அக்கட்சி ஆட்சியை பிடிக்க கூடிய சூழல் காணப்படுகிறது.  இது அக்கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகளிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.  அவர்கள் ஒருவருக்கு ஒருவர் இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

.எல்லா பத்திரிக்கைகளும் குறிப்பாக முன்னணி பத்திரிகைகள் ஆம் ஆத்மி வெற்றியை பேசுவதை விடுத்து பாஜக வின் ஓட்டு சதவீதம் கூடிவிட்டதாக பேசுகின்றன

ஆம் ஆத்மி வெற்றியின் மூலம் மதவாத பாஜகவுக்கு மக்கள் பாடம் கற்பித்துள்ளார்கள். காங்கிரஸுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது வருத்தம் என்றாலும் பாஜக வீழ்த்தப்பட்டதால் மகிழ்ச்சி அடைகிறோம் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிரஞ்சன் சவுத்திரி கூறியுள்ளார். 

டெல்லி தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் டெல்லி பாஜக அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது. 

மாடல் டவுன் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் ஆம் ஆத்மி அமைச்சரும், பாஜக வேட்பாளருமான கபில் மிஸ்ரா பின்னடைவை சந்தித்துள்ளார்.

அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசில் நீர்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கபில் மிஸ்ரா. இவர் 2017-ம் ஆண்டு மே மாதம் 6-ம் தேதி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து, கேஜ்ரிவால் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக கபில் மிஸ்ரா குற்றம் சாட்டினார். அதன்பின் பாஜகவில் இணைந்த கபில் மிஸ்ரா மாடல் டவுன் தொகுதியில் போட்டியிட்டார்

அது போலவே ,டெல்லி சாந்தினி சவுக் தொகுதியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் அல்கா லம்பா. கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சி நடவடிக்கையில் இருந்து சிறிது காலம் விலகியிருந்தார். ஆம் ஆத்மி கட்சியை விட்டு விலகிவிட்டதாக கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதன் அடிப்படையில் அல்கா லம்பாவை சட்டப்பேரவையில் இருந்து தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இந்த தகுதி நீக்கம் செப்டம்பர் 6-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.

இந்நிலையில் அவர் கடந்த அக்டோபர் மாதம் முறைப்படி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். டெல்லியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அல்கா லம்பா, சாந்தினி சோக் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி அல்கா லம்பா பின்னடைவைச் சந்தித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top