கோவையில் நீலச்சட்டை பேரணி; பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்துகிறது

கடந்தஆண்டு சிறப்பாக நடந்து முடிந்த கருஞ்சட்டைபேரணிக்கு அடுத்து நீலச்சட்டை பேரணியை கோவையில் இன்று நடத்துகிறது பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு

பேரணியும்  அதனை தொடர்ந்து சாதி ஒழிப்பு மாநாடும் நாளை பிப்ரவரி 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3மணிக்கு அவினாசி சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே துவங்குகிறது

.கருஞ்சட்டை பேரணியை வெற்றிபெற செய்ததைப் போல நீலச்சட்டை பேரணியையும் வெற்றிபெற செய்ய அனைத்து இயக்கத் தோழர்களும் உணர்வாளர்களும் கோவையை நோக்கி வருமாறு பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது

புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு நீலச்சட்டை பேரணி மற்றும் ஜாதி ஒழிப்பு மாநாட்டிற்கு சாதி, மதத்தை தூக்கியெறிந்துவிட்டு தமிழர்களாய் நாளை நாம் அனைவரும் கோவையில் நீலச்சட்டையுடன் ஒன்றுகூடுவோம்.

வாருங்கள் தோழர்களே! அண்ணலின் லட்சிய தீபத்தை ஏந்துவோம்.
சாதி மத சகதியை துடைத்தெறிவோம் என்று அற்புதமான பாடல்களோடு மக்களை அழைக்கிறது பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top