இஸ்லாமியர்களை இழிவாக பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராகப் போராட்டம்

சமீப காலமாக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தான் அதிமுக அமைச்சர் என்பதை மறந்து, தன்னை பாஜக கட்சியின் அமைச்சராக கற்பனை செய்து கொண்டு பேசிவருகிறார்.அதிமுக கட்சிகாரர்களால் கூட அவரது பேச்சை தாங்கிக்கொள்ள முடியவில்லை

குறிப்பாக அவர் இஸ்லாமியர்களை தாக்கி வருவது கண்டனத்துக்குரியது.மேலும்,உயர்நீதிமன்ற தீர்ப்புகளை கூட மதிக்காமல் மதுரை –தேனி பால் உற்பத்தியாளர் சங்கம் தேர்தல் விசயத்தில் ஓ.பன்னீர்செல்வம் சகோதரர்க்கு சாதகமாக நடந்துகொண்டது என பல சர்ச்சைகள் இவரை சுற்றி வந்துகொண்டிருக்கின்றன

இந்நிலையில் முஸ்லிம்களை அவதூறாகப் பேசியது கடும் சர்ச்சைக்குள்ளானது. இதை கண்டிக்கும் விதமாக  விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 75 பெண்கள் உள்ப 300 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முஸ்லிம்களை அவதூறாகப் பேசியதைக் கண்டித்து விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே நேற்று தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், பொதுமக்கள் பாதையை மறித்தும் காவல்துறை கலைந்துபோகச் செல்லியும் கலைந்து போகாமல் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் போராட்டம் நடத்தியதாக தமுமுக மாவட்டத் தலைவர் முகமது இப்ராகிம், மாவட்ட பொருளாளர் அப்துல் அன்வர், எஸ்.டி.பி.ஐ. மாவட்ட செயலர் அபுபக்கர் சித்திக் உள்ளிட்ட 300 பேர் மீது விருதுநகர் மேற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும், சாத்தூரில், ”கே.டி.ராஜேந்திரபாலாஜியின் அமைச்சர் பொறுப்பைப் பறித்து நடவடிக்கை எடு” என சுவரொட்டி ஒட்டியதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் முகமது சபீக், செயலர் சிந்தாஷா ஆகியோர் மீது சாத்தர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்

ராஜபாளையத்தில் சுவரொட்டி ஒட்டியதாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனித நேய மக்கள் கட்சி அமைப்பினர் மீது ராஜபாளையம் வடக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

காவல்துறையும் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி சொல்கிறபடி ஆடுகிறது போஸ்டர் ஒட்டியதற்கு கூட இஸ்லாமியர்களை கைது செய்கிறது. இவருடைய போக்கு அதிமுகவில் இருக்கிற இஸ்லாமியர்களை வேறு கட்சிக்கு அனுப்பி விடும் போலிருக்கிறது.   


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top