இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வரவேற்பு; தமிழகத்தில் கடும் எதிர்ப்பு !

சர்வதேச மக்களால் இனப்படுகொலை குற்றவாளி என அறியப்படுகிற மகிந்த ராஜபக்சவே இன்று இந்தியா வந்தார் அவரை மோடி வரவேற்றார்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இனப்படுகொலை குற்றவாளியும் , இலங்கை பிரதமருமான  ராஜபக்சே, இன்று டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேசினார்.

இலங்கை பிரதமர், இனப்படுகொலை குற்றவாளி மகிந்த ராஜபக்சே 5 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று அவருக்கு டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால்,தமிழகத்தில் ‘இனப்படுகொலை குற்றவாளியே திரும்பி போ’ என முழக்கங்கள் செய்து கண்டன கூட்டம் நடைபெற்றது

அவரை பிரதமர் மோடி வரவேற்றார். ராஜபக்சேவுக்கு பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.இந்திய ஒன்றியத்தின் மூத்த இனமான தமிழர்களை இனப்படுகொலை செய்த ஒரு சர்வதேச குற்றவாளிக்கு பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது மன்னிக்க முடியாத குற்றமாக கருதப்படுகிறது

அதன்பின்னர் அவரது குழுவினர், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசினர். ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.  

இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துதல், ராணுவம், பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேசப்பட்டது. 

இந்நிலையில் தமிழகத்தில் இந்தியா வந்துள்ள இனப்படுகொலையாளனை கண்டிக்கும் விதமாக இனப்படுகொலை குற்றவாளி மகிந்த ராஜபக்சவே திரும்பப் போ என்ற முழக்கத்துடன் ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர்கோட்டத்தில்  நேற்று [07-02-20] வெள்ளி மாலை நடைபெற்றது.

இதில்,திராவிடர் விடுதலை இயக்கம் , மே பதினேழு இயக்கம் மற்றும் பல இயக்கங்கள் கலந்துகொண்டன. விடுதலை இராசேந்திரன், தோழர் பிரவீன் குமார் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

ராஜபக்சே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரதமராக பதவியேற்ற பிறகு, முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவிற்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top