ராகுலை பேசவிடாமல் தடுத்தது பாஜக;எதிர்க்கட்சிகள் கடும் அமளி ; மக்களவை நண்பகல் 1 மணி வரை ஒத்திவைப்பு

பேசவிடாமல் தடுக்கும் பாஜக வின் அடக்குமுறை! எதிர்க்கட்சிகள் கடும் அமளி காரணமாக மக்களவை நண்பகல் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற மக்களவை இன்று காலை கூடியதும், பிரதமர் மோடிக்கு எதிராக ராகுல் காந்தி  பேசியது குறித்து மத்திய ஹர்ஷ் வர்த்தன் கூறிய கருத்தால் மக்களவையில் இன்று கடும் அமளி ஏற்பட்டது. இதனால், நண்பகல் 1 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.  

கேள்வி நேரத்தின் போது ராகுல் காந்தி கேள்வி எழுப்பிய போதும் அவரை பேசவிடாமல்  குறுக்கிட்து  ஹர்ஷவர்த்தன் தொந்தரவு கொடுத்தார்,தொடர்ந்து பாஜக காரர்கள் அத்துமீறி நடந்துகொண்டதால் எதிர்கட்சிகள் கண்டித்தது  

தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்த காங்கிரஸ் தலைவருக்கு எனது கண்டனத்தை  பதிவு செய்து கொள்கிறேன்” என்றார். ஹர்ஷவர்த்தன்.  இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவையை சபாநாயகர் ஒத்திவைத்தார். 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top