கொரோனா வைரஸ்;மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய டாக்டர் லி வென்லியாங் அதிர்ச்சி மரணம்

சீனாவில் வுகான் மாவட்டத்தில் பரவிய கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களையும் அது வெளியே பரவினால் என்ன, என்ன ஆபத்துகள் வரும் எனவும்    முன் கூட்டியே எட்டு மருத்துவர்கள் குழு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மக்களுக்கும் அரசுக்கும் தெரிவித்து இருந்தது .

அரசு சரியாக எடுத்துக்கொள்ளாததால் வுகான் மாவட்டத்தின் மருத்துவமனையில் உள்ள மற்ற  மருத்துவர்களிடம் கொரோனாவின் ஆபத்தை விளக்கியிருக்கிறார்கள்.அந்த எட்டு மருத்துவர்களில் ஒருவரான மருத்துவர் லி வென்லியாங் சீனா போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டார்.அவரை கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெறப்பட்ட சூழலில் நேற்று அவர் தொற்றுநோயால் இறந்தார் என அறிவிக்கப்பட்டது

அவரது உடல் நிலை குறித்த முரண்பாடான அறிக்கைகள் சீன நெட்டிசன்களிடையே பரவியதால் பொதுமக்களின் வருத்தத்தை அதிகரித்தன, மருத்துவர் லி வென்லியாங் [34], கொரோனா வைரஸைப் பற்றி மக்களிடையே  விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் அவரது ஆரம்பகட்ட  முயற்சி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் அவர் ஒரு  ஹீரோவாக கருதப்பட்டார்.  லியின் நடவடிக்கைகளை கட்டுபடுத்த அவர்  உள்ளூர் போலீசாரால் குறிவைக்கப்பட்டார்

வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் லி மரணம் குறித்த அறிக்கை வெளிவந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது

வுஹான் கொரோனா வைரஸால் லி வென்லியாங் இறந்துவிட்டார் என்று சீன சமூக ஊடகங்களில் செய்தி பரவத் தொடங்கியதும்

இது  வதந்தியாக இருக்ககூடும் என  சீன நெட்டிசன்களிடையே பெரும் வருத்தத்தையும் கோபத்தையும் தூண்டியது. அவர்களில் பலர் ஏற்கனவே லியை பற்றி அறிந்தவராகவும் அவரது சமூக செயல்பாடுகள் குறித்து தெரிந்தவராகவும் இருந்தனர். இதை ஒரு துன்பகரமான விசயமாக கண்டனர்.

இரவு 10.40 மணி. வியாழக்கிழமை – சீன அரசு நடத்தும் டேப்ளாய்ட் குளோபல் டைம்ஸ் தனது ட்விட்டர் கணக்கில் ‘லி’ இறந்துவிட்டதாக அறிவித்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித்தாள் பீப்பிள்ஸ் டெய்லி ‘லி’ இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தியது , அவரது மரணம் “தேசிய வருத்தத்தை” தருவதாக கூறியது.

உலக சுகாதார அமைப்பு (WHO) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் ‘லி’ இறந்ததால் “மிகவும் வருத்தமடைகிறோம் ” என்று கூறியது , ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு அந்த ட்வீட்டை நீக்கிவிட்டது .

உலக சுகாதார அமைப்பு [WHO] பின்னர் தெளிவுபடுத்தி ஒரு அறிக்கையை வெளியிட்டது  அதில், தன்னிடம் ‘லியின்’ நிலை குறித்து எந்த தகவலும் இல்லை  என்றும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு கேள்விக்கு அளித்த பதிலே அது என்றும் கூறுகிறது.

12.38 a.m காலையில் வுஹான் மத்திய மருத்துவமனை ஒரு அறிக்கையை வெளியிடுகிறது, லி இறந்துவிடவில்லை, ஆனால் ஆபத்தான நிலையில் உள்ளார், மருத்துவர்கள் அவரை காப்பற்ற போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்றது

அதே நேரத்தில் சீன அரசின் பத்திரிக்கையான குளோபல் டைம்ஸ் மற்றும் பீப்பிள்ஸ் டெய்லி பத்திரிகையில் ‘லி’ மரணம் குறித்த அறிக்கைகள் நீக்கப்பட்டன.

அதிகாலை 12.57 வெள்ளிக்கிழமை – குளோபல் டைம்ஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் லி “இன்னும் அவசர சிகிச்சையில் உள்ளார் ” என்று கூறுகிறது. “ஐ.சி.யுவிற்குள் மக்கள் அழுவதை நிருபர்கள் கேட்டார்கள்” என்று ட்வீட் கூறுகிறது.

வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் – சீன சமூக ஊடகங்களில் மக்களின் உணர்ச்சி அலை பெருகி வருகிறது. “எங்களுக்கு பேச்சு சுதந்திரம் வேண்டும்” என்ற சொற்றொடர் ஹேஷ்டேக்குடன், ட்விட்டர் போன்ற சீன வலைத்தளமான ‘வெய்போ’வில் கடுமையாக வைரலாக தொடங்குகிறது. ‘வெய்போ’ பயனாளர்கள் உடனடியாக  மற்றொரு ஹேஷ்டேக்கை ட்ரன்ட் பண்ணுகிறார்கள்  – “எனக்கு பேச்சு சுதந்திரம் வேண்டும்” – இது கிட்டத்தட்ட 2 மில்லியன் பார்வைகளை விரைவாக ஈர்க்கிறது.

அதிகாலை 3.48 வெள்ளிக்கிழமை – வுஹான் மத்திய மருத்துவமனை வெய்போவில் லி அவரை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சித்த போதிலும் அதிகாலை 2.58 மணிக்கு இறந்துவிட்டதாக அறிவித்தது. “எங்கள் ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அந்த இடுகை கூறுகிறது.

வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் – குளோபல் டைம்ஸ் மற்றும் பீப்பிள்ஸ் டெய்லி தங்கள் ட்விட்டர் கணக்குகளில் லி இறந்துவிட்டதாக அறிவிக்கின்றன. டிசம்பர் மாதத்தில் கொரோனா வைரஸைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்ற ஒரு விசில் ப்ளோவராக ‘லி’யின் பங்கை மறக்காமல் குறிப்பிடுகிறது.

கொரோன வைரஸின் பாதிப்பை மக்களிடம் எடுத்துசொன்ன, அரசை அம்பலப்படுத்துவராக இருந்த மருத்துவர் லி வென்லியாங், அரசு மற்றும் நிறுவனங்களால் இறக்கடிக்கப்பட்டும் உயிர்பிக்கப்பட்டும் கொண்டிருந்தார்.கடைசியில் இறந்தே விட்டார்!

.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top