குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு; ரஜினிகாந்த்க்கு வருமான வரித்துறை அபராதம் குறைப்பு!

வருமானவரி துறையினரிடம் போலியான கணக்கை காண்பித்ததில் ரஜினி காந்த் சிக்கியது தெரிந்த விசயமே.இதை ஆளும் பாஜக பகடைக்காயாக பயன்படுத்த ஆரம்பித்து விட்டது ரஜினியும் தன பெயரைக் காப்பாற்றிக்கொள்ள பாஜகவின் வலையில் வீழ்ந்து விட்டார்.

தற்போது ரஜினிகாந்திற்கு இரண்டு பிரச்சனைகள் பெரும் தலைவலியாய் வந்து நின்றது ஒன்று தர்பார் படம் சரியாக ஓடாததால் விநியோகஸ்தர்கள் ரஜினியை நேருக்க ஆரம்பித்து விட்டார்கள்.மற்றொன்று ஒரிஜினல் வருமானத்தை மறைத்த குற்றத்திக்கு பெரும் பணம் வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டியது வந்தது.

இதில்  தர்பார் படம் அதிகவிலைக்கு விற்கப்பட்டு படம் சரியாக போகாததால் விநியோகஸ்தர்கள் பெரும் நஷ்டம் அடைந்தனர் ரஜினியிடம் இது குறித்து கேட்பது என்று சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் தலைமையில் கூட்டம் நடைபெற்றதாக தகவல் வருகிறது.அன்புசெழியனின் அறிவுரைபடி விநியோகஸ்தர்கள் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை திரும்ப கிடைக்கசெய்ய வழி சொல்லும்படி ரஜினிக்கு நெருக்கடி கொடுத்தனர்

ஏற்கனவே வருமானவரித் துறையினரிடம் மாட்டிக்கொண்டு முழிக்கிற ரஜினிகாந்த் இந்த புதிய நெருக்கடியையும் சமாளிக்க என்ன செய்யலாம் என்று முடிவு  எடுத்தது  பாஜக விடம் சரணடைய வைத்தது 

வருமானத்தை மறைத்த விவகாரத்தில் ரஜினிகாந்திடம் குறைந்தபட்ச அபராதமாக ரூ.66.22 லட்சம் வசூலிக்க வருமான வரித்துறையை நிர்பந்திக்க  முடிவு செய்துள்ளது பாஜக.

மற்றும் மத்திய அரசின் சுற்றறிக்கையின் அடிப்படையில் ரஜினி மீது வருமான வரிதுறையினர் போட்ட வழக்கை திரும்பப்பெறுவதாகவும் ரஜினிகாந்துக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் வருமான வரித்துறை கைவிடவும் செய்துள்ளது

அதே நேரத்தில், தர்பார் பட நஷ்டத்தை ஈடுகட்ட சொன்ன விநியோகஸ்தர்களுக்கு பின்னால் இருந்த அன்புசெழியனின் வீட்டில் வருமானவரி துறையினர் திடீரென ‘ரைடு’  நடத்தினர். அத்தோடு நில்லாமல் அவர் பைனான்ஸ் செய்யும் பட நிறுவனம் கல்பாத்தி அகோரம் சினிமா ,நடிகர் விஜய் வீடு ,இயக்குனர் அட்லி வீடு என ஒரே நேரத்தில் பல இடங்களில் வருமானவரி துறையினர் ரைடு நடத்தி ரஜினியை குளிர வைத்தனர்   

போலியான கணக்கு காண்பித்ததற்கு குறைந்த பட்ச அபராதமும் தர்பார் படத்திற்கு நஷ்டயீடு கொடுக்காமல் தப்பித்து, அன்புசெழியன் மற்றும் நடிகர் விஜய் வீடு ரைடுக்கு வருமானவரி துறையினர்கள் சென்றதும் ரஜினிகாந்த் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு ஆதரவு கொடுத்ததும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டது. தமிழக மக்கள் இதை புரிந்துகொண்டால் நல்லது.இல்லையென்றால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பற்ற முடியாது!

  சேவற்கொடியோன்  


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top