வருமான வரித்துறையினர் நடிகர் விஜய் யின் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பை நிறுத்தி விசாரணை!

மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். விஜய்க்கும் விஜய் சேதுபதிக்கு இடையேயான சண்டைக்காட்சிகள் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. சுரங்கப்பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் வருமானவரித்துறை அதிகாரிகள் விஜய்யை அழைத்து சென்றதால் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தில் ஐடி ரெய்டு நடந்துவரும் நிலையில், விஜய்யிடம் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

சென்னையில் ஏஜிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.25 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை கூறி உள்ளது.

சென்னையில் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்கள், அந்த நிறுவனத்துக்கு கடன் வழங்கிய பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். 20க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

விஜய் நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் பிகில். விஜய்-அட்லி 3-வது முறையாக கூட்டணி சேர்ந்த இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், வசூலை வாரிக்குவித்ததாக திரையுலக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தரப்பில் வசூல் குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. 

இந்நிலையில், இன்று ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் இந்நிறுவனத்துக்கு கடன் வழங்கிய பைனான்சியர் அன்புச்செழியனின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்படுகிறது. 

பிகில் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் விஜய் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் இன்று நடைபெற்று வந்தது. அப்போது படப்பிடிப்பு தளத்துக்கு திடீரென வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், ‘பிகில்’ பட சம்பள விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய்யிடம் விசாரணை நடத்தினர். பின்னர் மேற்கொண்டு விசாரணைக்காக விஜய்யை அங்கிருந்து அழைத்து சென்றனர். இதனால் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில், சென்னை சாலிகிராமம் மற்றும் நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சமீபத்தில் ரஜினிகாந்த் வருமான வரி துறையினரிடம் கொடுத்த கணக்கு சாதகமாக நேர் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது  

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top