டெல்லி சாஹின்பாக்கில் மீண்டும் துப்பாக்கி சூடு; இந்து தீவிரவாதி கைது!

டெல்லியில் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான தொடர் போராட்டம் ஷாஹின்பாக் பகுதியில் நடந்து வருகிறது.இந்த போராட்டத்திலும் இந்து தீவிரவாதி ஒருவன் உள்ளே நுழைந்து போராட்டக்காரர்களை மிரட்ட துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டான்.

டெல்லியில் ஷாஹின்பாக் போராட்டத்தையடுத்து 3 நாட்களில் 2வது முறையாக துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது

ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் அருகே 3 நாட்களுக்கு முன்னதாக ஆர்.எஸ்.எஸ் காரன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டபடி ‘இங்குதான் சுதந்திரம்’ என்று கத்தியபடி “இந்தா விடுதலை நான் தருகிறேன்” என்று துப்பாக்கியால் சுட்ட  சம்பவத்துக்கு அடுத்தபடியாக சனிக்கிழமை அன்று , ‘எங்கள் நாடு..’சுதந்திர நாடு என்று  கத்தியபடி இன்னொருவன் துப்பாக்கியால் சுடுகிறான். மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் ‘போராடுபவர்களை  சுடுங்கள்’ என்று பேசிய பிறகு இது தொடர்ந்து நடக்கிறது  

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஷாஹின்பாக்கில் சிஏஏவுக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போலீஸ் அருகாமையிலிருந்து இன்று ஒரு நபர் மீண்டும் 2-3 முறை சுட்டுள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளனர்.

இந்த நபரை போலீஸார் பிடித்துச் சென்றனர். இன்று மாலை 4.53 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் ஒருவருக்கும் காயமேற்படவில்லை.

வியாழனன்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மாணவர் ஒருவர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு இல்லை மதத்தின் அடிப்படையில் பொதுமக்களை பிரிக்கும் சட்டத்தை அரசே கொண்டுவந்து பாதுகாப்பு இன்மையை உருவாக்கி விட்டது.நாட்டின் உச்சநீதிமன்றமோ இதை பற்றி கவலைபடாமல் இருக்கிறது.இந்து தீவிரவாதம் பெருக அரசே காரணமாகிவிடக் கூடாது என்று சமூகஅக்கறை கொண்டவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்  


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top