தியாகிகள் தினத்தன்று அரசியலமைப்பு சட்டத்தை காக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஊர்வலம்;தலைமை நீதிபதிகண்டனம்

உயர்நீதிமன்றத்தில் சி.ஐ.எஸ்.எஃப் பணியாளர்களை நிரந்தரமாக நிறுத்துவது  தொடர்பான மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது  விசாரணை அமர்வு மகாத்மா காந்தியின் நினைவு  நாளான  தியாகிகள் தினத்தன்று உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் பல முன்னணி மற்றும் மூத்த வக்கீல்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எம்.அக்பர் அலி, டி.ஹரிபரந்தமான் மற்றும் கே கண்ணன் ஆகியோர் பங்கேற்றதை விமர்ச்சனம் செய்தது  

காந்தி ஆர்.எஸ்.எஸ் பணியாளர் கோட்சேவால் சுட்டுக்கொல்லப்பட்ட தினமான ஜனவரி முப்பது அன்று ‘தியாகிகளை நினைவு கூறுவோம்’ என்று “காந்தி என்றென்றும்” என்ற தலைப்பில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தின் வெளிப்பகுதியில் ஓய்வுபெற்ற மூன்று நீதிபதிகள் தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது

அதில் உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் எண்ணற்ற இளம் வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டி முழக்கங்கள் இட்டு சென்றனர்..

இந்நிலையில் ,உயர்நீதிமன்ற வளாகத்திற்கு பாதுகாப்பை நீட்டிப்பது தொடர்பாக சிஐஎஸ்எஃப் படையின் சேவையை தொடரும் விசயமாக  2015 ஆம் ஆண்டு சுயோ மோட்டோவாக பிஐஎல் மனுவின் விசாரணையின் போது, ​​தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹிப் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி. ராஜகோபாலன் மற்றும் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணனிடம் நடந்து முடிந்த ‘காந்தி என்றென்றும்’ ஊர்வலத்தை பற்றி தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்தார்

மேலும் ,இவ்வழக்கை தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி மற்றும் நீதிபதி சுப்ரமணிய பிரசாத் ஆகியோர் நீதிபதிகள் என்.கிருபாகரன், கே.ரவிச்சந்திரபாபு மற்றும் பி.என். பிரகாஷ் ஆகியோர் அமர்வுக்கு அனுப்பி இதன் மீது நடவடிக்கை எடுக்கவும்  வளாகத்தில் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து உறுதியான ஆலோசனைகளை வழங்கவும்  கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

அரசியலமைப்பு சட்டத்திற்கு கேடு வந்திருக்கும் இந்த சூழலில் அதை காப்பாற்றும் முயற்சியை முகமையான வழக்கறிஞர்களும் நீதிபதிகளும்தான் முன்னெடுக்கவேண்டும்.அதன் அடிப்படையிலே ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி. ஹரிபரந்தாமன், கே. கண்ணன் மற்றும் ஜி.எம். அக்பர் அலி ஆகியோர் தலைமையில் மூத்த ,இளம் வழக்கறிஞர்களின் ஊர்வலம் உயர்நீதிமன்ற ஆவின் கேட்டில் ஆரம்பித்து குறளகம் வழியாக வடக்கு வாசலுக்கு ஊர்வலமாக நடந்து வந்து  எஸ்ப்ளேனேட் கேட்டை அடைந்து, நீதிமன்றத்தின் டாக்டர் அம்பேத்கர் சிலையில் இறுதியாக முடிந்தது.இதில் என்ன தப்பு உள்ளது.மிகமோசமான காலகட்டத்தில் எங்களது ஜனநாயக உணர்வை நாங்கள் வெளிப்படுத்தி ‘ என்றனர்  

உயர்நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்புப் பொறுப்பில் உள்ள ஒரு துணை போலீஸ் கமிஷனரால் இது தடுக்கப்பட்டது என்றும் “ஊர்வலத்தில் வந்த மூத்த வழக்கறிஞர்கள் என்னுடைய பேச்சை கேட்காமல் நீதிமன்ற பாதுகாப்பை சட்டை செய்யவில்லை எனவும் இது  “மிகவும் துரதிர்ஷ்டவசமான ஒரு சம்பவம்:என்றும் நீதிமன்ற பதிவாளரிடம் கடிதம் எழுதி தந்திருக்கிறார்

காவல்துறை ஆய்வாளர்  அறிக்கை உயர்நீதிமன்ற பாதுகாப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த கடிதத்துடன் வீடியோ காம்பாக்ட் டிஸ்க் மற்றும் புகைப்படங்கள் (ஒரு குறுவட்டிலும்) இணைக்கப்பட்டுள்ளன.

“இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டதைக் கவனித்த பின்னர், இதில் கவலைக்குரியது என்னவென்றால், இந்த சம்பவத்தில்  மூன்று முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் வளாகத்திற்குள் நுழைந்து நடந்து கொண்டிருந்த போராட்டத்தில் இணைந்தது  என்பதுதான் என்று தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் கூறி இருக்கிறது .

முழு நீதித்துறை அமைப்பையும் பாதுகாக்கிற விசயமாக இருப்பதாலும் உயர் நீதிமன்றத்தால் மேற்கொள்ளப்பட வேண்டிய எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கைகளில் பெரிய தாக்கத்தை இந்த சம்பவம் ஏற்படுத்தக்கூடும். எனவே, இந்த சம்பவம் நிர்வாக தரப்பில் உடனடியாக கவனிக்கப்பட  வேண்டும்.”எனவே, உயர்நீதிமன்றத்தின் பாதுகாப்புக் குழுவை அதன் பரிந்துரைகளுடன் அவசரமாக எடுத்து, நீதித்துறை தரப்பில் தகுந்த நடவடிக்கை எடுப்பதற்காக அல்லது அடுத்த தேதிக்குள் இந்த விஷயத்தை மீண்டும் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.” என அமர்வு கூறியிருக்கிறது

வருங்காலத்தில் உயர் நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய  சி.ஐ.எஸ்.எஃப் மற்றும் மாநில காவல்துறையினருடன் கலந்துரையாடவும், இரு படைகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது குறித்தும், இரு பாதுகாப்பு அமைப்பினரால்  பாதுகாக்கப்பட்ட கட்டிடங்கள் மற்றும் வளாகங்களில் ஒரு சீருடை  பாதுகாப்பு ஏற்பாட்டை உறுதி செய்வதற்கும் உறுதியான பரிந்துரைகளை கொண்டு வருமாறு பாதுகாப்புக் குழுவையும் பெஞ்ச் கேட்டுக்கொண்டது.

உயர்நீதிமன்றத்தில் சி.ஐ.எஸ்.எஃப் பணியாளர்களை நிரந்தரமாக நிறுத்துவது  தொடர்பான மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது பெஞ்ச் இந்த அவதானிப்பை மேற்கொண்டது.எல்லோரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.உயர்நீதிமன்ற வளாகத்தில் கூட ஜனநாயகத்தை பாதுகாக்க முடியவில்லை என்றால் நாட்டில் எப்படி முடியும் என பேசிக்கொள்கிறார்கள்.

இது குறித்து முன்னாள் நீதிபதி கண்ணன் பதிலளித்த போது “தியாகிகள் தினத்தை கடைபிடிப்பதும், ஜனநாயகம் மீதான நம்பிக்கையை மீண்டும் வலியுறுத்தும்,அரசியலமைப்பு சட்டத்தை காக்க கோரிய பதாகைகள்  வைத்திருப்பது மோசமானதாக இருந்தால், அது பரிதாபகரமானது.” என்று கூறினார்

அரசியலமைப்பு சட்டத்தின்  முன்னுரை அடங்கிய பதாகைகளை எடுத்துச் செல்வதில் தவறில்லை என்று நீதிபதி ஹரிபரந்தமன் கூறினார். பங்கேற்காத ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி கே.சந்திருவை தொடர்பு கொண்டபோது, ​​“பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்ற பிறகா  காந்தி சுதந்திரத்திற்கு முந்தைய போராட்டங்களை நடத்தினாரா? என்றார்.

சேவற்கொடியோன்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top