சிஏஏ-க்கு எதிராக ஜாமியா பகுதி போராட்டத்தில் இந்துத்துவாஅமைப்பை சார்ந்தவன் துப்பாக்கியால் சுட்டான் -ஒருவர் காயம்

டெல்லியில் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக ஜாமியா பல்கலைக்கழகத்திற்கு அருகே இன்று நடைபெற்ற போராட்டத்தின் போது இந்துத்துவா அமைப்பை சார்ந்த நபர் ஒருவன் துப்பாக்கியால் மக்களை நோக்கி சுட்டான்

புதுடெல்லி உள்ள ஜாமியா இஸ்லாமியா பல்கலைக்கழகப் பகுதியில் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடைபெற்றுவருகிறது. 

இந்த போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு குடிரியுரிமை திருத்தச்சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக கடந்த சில போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், ஜாமியாவில் இன்று போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்திற்குள் நுழைந்த இந்துத்துவா அமைப்பை சார்ந்த நபர் ஒருவர் அங்கு கூடியிருந்த போராட்டக்காரர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த போராட்டக்காரர்கள் அலறிடித்துக்கொண்டு ஒடினர். இந்துத்துவா அமைப்பை சார்ந்த நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் காயமடைந்தார்.அங்கிருந்த போலீஸ்காரர்கள் இதை முதலில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாகவும் பொதுமக்கள் அலறிய பிறகே அந்த நபர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வருகிறது

இதையடுத்து அங்கு இருந்த போரட்டகாரர்களே அந்த நபரை பிடித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசார் வசம் ஒப்படைத்தனர்.போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

போராட்டக்காரர்கள் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக இது ‘சுதந்திர நாடு’ என்று முழக்கங்கள் எழுப்பிக்கொண்டிருந்தபோது துப்பாக்கி ஏந்தி வந்த இந்துத்துவா அமைப்பை சார்ந்த நபர் “ஆமாம், ‘இங்குதான் உங்கள் சுதந்திரம் உள்ளது’ என்று கூறிய படியே கூட்டத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டான்

மேலும், காயமடைந்த நபரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக பொதுமக்களே அனுமதித்தனர். போலீஸ் காயம் பட்ட மாணவரை தூக்கி செல்ல  முதலில் போலீஸ் அனுமதிக்கவில்லை பேச்சுவார்த்தைக்கு பிறகே அனுமதித்தார்கள்

இரண்டு தினங்களுக்கு முன்பு பாஜக வைச்சேர்ந்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா ஆகியோர் டெல்லி தேர்தலில் பிரச்சாரம் செய்யும் பொது குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராடுபவர்களை துப்பாக்கியால் சுடுவோம் [“கோலி மரோ] என்றார். மற்றும், பாஜக எம்.பி பர்வேஷ் வர்மா குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான ஷஹீனில் ஒரு வாரகால அமைதியான உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தியவர்களை பார்த்து “உங்கள் வீடுகளுக்குள் நுழைந்து , உங்கள் சகோதரிகளையும் மகள்களையும் பாலியல் பலாத்காரம் செய்வோம்”.என்று பேசினார்

அதனுடைய விளைவே இன்று இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவன் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு போராட்டக்காரர்களை நோக்கி சுட்டிருக்கிறான் இனி பாஜக எம்.பி பர்வேஷ் வர்மா சொல்வது போல் நம் வீடுகளுக்குள் புகுந்து பெண்களை பாலியல் பலாத்காரம் பண்ணுவார்களோ என்ற அச்சத்தோடு இருக்கிறோம் என்று போரட்டக்காரர்களில் ஒருவர் கூறினார்

சிஏஏ போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் டெல்லி ஜாமியா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top