தேசத்துரோக வழக்கு ; டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பீகாரில் கைது

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக பெரும் போராட்டம் முதலில் அசாமில் ஆரம்பித்தது.காரணம் காலகாலமாக அசாமில் இருந்து வந்த பத்தொன்பது லட்சம் அசாம் குடிமக்கள் ஒரே நாளில் நாடற்றவராக ஆக்கப்பட்டார்கள்.அதை தொடர்ந்து நாடெங்கும் போராட்டம் வெடித்தது.

டெல்லியில் மாணவர்கள் போராட்டம் செய்தபோது போலீஸ்காரர்கள் மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கினார்கள்.அது மேலும் போராட்டத்தை தீவிரமாக்கியது

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் இந்நாட்டின் உயர்ந்த கல்வி நிறுவனமான ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் திடீரென நிழைந்து மாணவிகளை தாக்க ஆரம்பித்தார்கள்

இந்த சூழலில் ஜவகர்லால் நேரு பல்கலை மாணவர் அசாம் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசிய வீடியோ ஒன்றை ஆதாரமாக வைத்து  தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வருபவர் மாணவர் ஷர்ஜீல் இமாம். இவர் சமீபத்தில் பேசிய வீடியோ ஒன்று வைரலானது.  அதில் அவர் பேசும்பொழுது, நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடவேண்டும் அசாம் மக்களுக்கு நாம் உறுதுணையாக இருக்கவேண்டும் என்று பேசியதை சர்ச்சசைக்குள்ளாக்கி

மக்களை தூண்டும் வகையில் பேசியதற்காக இவர் மீது அசாம் போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். 

கடந்த 16ந் தேதி அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக உத்தரபிரதேச போலீசாரும் இவர் மீது வழக்கு ஒன்று பதிவு செய்துள்ளனர்.

இதேபோன்று, டெல்லி போலீசார் இவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்வதற்கான பணியில் ஈடுபட்டனர். இதனிடையே பீகாரின் ஜெகனாபாத் நகரில் இருந்த அவரை டெல்லி போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

இந்த  குற்றச்சாட்டுகள், கைது நடவடிக்கை உள்ளிட்ட விவகாரங்களில் நீதிமன்றம் முடிவு செய்யும் என அவர் கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top