குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ராஜஸ்தான் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து ராஜஸ்தான் சட்டசபையிலும் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசின் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கேரள மாநில சட்டசபையில்  சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காக நடத்தப்பட்ட சிறப்பு கூட்டத்தொடரில் முதல் மந்திரி பினராயி விஜயன் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இதன்மூலம் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் மாநிலம் என்ற பெயரை கேரளா பெற்றது.

இதற்கிடையே, மத்திய அரசின் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப் மாநில சட்டசபையிலும் சிறப்பு தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. இந்தியாவில் உள்ள அனைத்து மத குழுக்களுக்கும் சட்டத்தின்முன் சமத்துவத்தை உறுதி செய்யவும் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை  ரத்து செய்யுமாறு இந்திய அரசிடம் வலியுறுத்த சபை தீர்மானிக்கிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ராஜஸ்தான் மாநில சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன்மூலம் கேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து ராஜஸ்தான் சட்டசபையிலும் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top