குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம்; திமுக தோழமை கட்சிகள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக திமுக தோழமை கட்சிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய மற்றும் மாநில அளவிலான பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.

தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி, உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் தோழமை கட்சி கூட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதனை தொடர்ந்து இன்று அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக திமுக தோழமை கட்சிகள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி, வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு இவற்றுக்கு எதிராக போராடும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தோழமை இயக்கங்கள் இணைந்து பெரிய அளவில் போராட்டத்தை அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வருகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top